சொல் பொருள்
(பெ) 1. மருதநில மக்கள், 2. தொழில்செய்வோர்,
சொல் பொருள் விளக்கம்
மருதநில மக்கள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Inhabitants of an agricultural tract
labourers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேங்கை கண்ணியர் எருது எறி களமர் நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை – நற் 125/9,10 வேங்கை மலர் மாலையைத் தலையில் சூடியவராய், எருதுகளை ஓட்டும் உழவர் போரடிக்கும் களத்தைப் பார்த்தாற்போன்ற அகன்ற இடத்தையுடைய பாறையில் மென்புல வன்புல களமர் உழவர் கடி மறுகு பிறசார் – பரி 23/26,27 மருதம் நெய்தலாகிய மென்புலத்திலும், குறிஞ்சி முல்லை ஆகிய வன்புலத்திலும் தொழில்செய்வோர், உழவர்கள் வழ்கின்ற சிறந்த தெருக்கள் பிறிதொரு பக்கத்தில்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்