குன்றி என்பது சிவப்பாகவோ அல்லது பாதி சிவப்பாகவும் பாதி கருப்பாகவோ உள்ள ஒரு வகை விதை, ஒரு கொடித் தாவரம் ஆகும்
1. சொல் பொருள்
(பெ) குன்றிமணி, அதன் செடி, பூ,
(வி) குறைந்து
2. சொல் பொருள் விளக்கம்
குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி, குஞ்சிரம், குண்டுமணி, குன்னி முத்து, குந்துமணி, குன்றி, மணிச்சிகை, பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படும் கொடி.
ஆனைக் குன்றி மணி, ஆனைக் குன்றிமணியின் விதை முழுவதுமாக சிகப்பு நிறத்தில் இருக்கும். குன்றிமணியின் விதையில் சிவப்பாகவும் சிறிது திட்டாகக் கருப்பு நிறமும் இருக்கும்.
பண்டைய காலத்தில் தங்கம், பொன் மற்றும் வைரங்களின் அளவு அறிய குன்றிமணியின் விதைகள் எடைகளாகப் பயன்பட்டன. மேலும் ஆபரணங்கள் செய்வதற்கும், சிறுவர்கள் பல்லாங்குழி விளை யாடுவதற்கும் பயன்படுவதுண்டு.
இரண்டு குன்றிமணி எடை = ஒரு மஞ்சாடி ( கிராம்). “ஒரு குண்டுமணி’ தங்கம் கூட வீட்டில் இல்லை என்பார்கள்.
கவர்ச்சியான இந்த விதை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது
குன்றிமணிச்சம்பா, செந்நிறமுடைய ஒரு சம்பா நெல் வகை. வகைகள்
- வெண்மை குன்றுமணி
- செம்மை குன்றுமணி
- மஞ்சள் குன்றுமணி
- நீல குன்றுமணி
- கருமை குன்றுமணி
- பச்சை குன்றுமணி
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Crab’s eye, Abrus precatorius, Adenanthera pavonnina, coral wood, a kind of seed to weigh small amount of gold from the ancient tamil and still now practicing, rosary pea, jequirity bean, indian licorice
paternoster pea, love pea, precatory bean, prayer bead, John Crow Bead, coral bead, red-bead vine, country licorice, Indian licorice, wild licorice, Jamaica wild licorice, Akar Saga, coondrimany, gidee gidee, Jumbie bead ratti/rettee/retty, goonjaa/gunja/goonja ,weather plant
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குப்பையில் எறிந்தாலும் குன்றுமணி கருக்காது – பழமொழி
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின் - குறு 0/3 குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர் - அகம் 133/1 குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள் - புறம் 340/2 குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண - புறம் 159/25 அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன் - புறம் 300/4
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து - குறள் 28:7 புறத்தில் குன்றிமணி போல செம்மையான வராய் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்கு போல கருத்திருப்பவர் உலகில் உண்டு என்பதாகும். குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் - குறள் 97:5
எண் இடை இட்டு சின்னம் குன்றியும் - பொருள். செய்யு:149/3 தான் நலம் திருக தன்மையில் குன்றி முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து - மது: 11/63,64 கொள் பவளம் கோத்த அனைய கால குன்றி செம் கண - சிந்தா:1 70/2 தம் புலன்கள் குன்றி தளர தம் காதலார் - சிந்தா:7 1576/3 குறையா நிறையின் ஒரு குன்றியும் காமம் இல்லை - சிந்தா:8 1963/2
பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற - தேவா-சம்:639/1 நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் - தேவா-சம்:639/2 அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் - தேவா-சம்:2252/3 குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ - தேவா-சுந்:332/2 குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை - தேவா-அப்:442/3 கொழு மணி ஏர் நகையார் கொங்கை குன்றிடை சென்று குன்றி விழும் அடியேனை விடுதி கண்டாய் மெய் முழுதும் கம்பித்து - திருவா:6 27/1,2 நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது - திருமந்:535/2 குன்றி நிறையை குறைகின்றவாறே - திருமந்:2918/4 முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி தன்னில் புரி கொண்ட மயிர் கயிறு ஆர சாத்தி - 3.இலை:3 58/1,2 குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள் - 3.இலை:3 90/1 வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி - நாலாயி:863/1 எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு - திருப்:23/5 அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு - திருப்:955/7 மற்று நல் பதி குன்றி அழிந்திட உம்பர் நாடன் - திருப்:1145/10 குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய் - திருப்:45/5 குன்றிமணி போல செம் கண் வரி நாகம் கொண்ட படம் வீசு மணி கூர் வாய் - திருப்:1334/5 புகை நிற குன்றி செம் கண் புறவு இனம் குடம்பை செய்திட்டு - சீறா:2571/2 குன்றி நிற்ப குறைகள் பொறுத்து நல் - சீறா:4248/3 பருக நல் நீரும் இன்றி பசி மிகுத்து அழகு குன்றி அரிவையர் கற்பும் இன்றி அகலிடம் மெலிந்தது அன்றே - சீறா:4747/3,4 வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை - வில்லி:12 86/1 மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய - வில்லி:39 41/3 நிற்கும் நல் நிலைமை குன்றி நேமியும் நெறிந்தது அன்றே - வில்லி:41 104/4 மறையவர் வேள்வி குன்றி மனு நெறி அனைத்தும் மாறி - கலிங்:258/1 வயல் ஆறு புகுந்து மணி புனல் வாய் மண்ணாறு வளம் கெழு குன்றி எனும் - கலிங்:368/1 வலியில் தீராது ஒளியில் குன்றி பெருநல் கூர்ந்த பெரு வரை அகலத்து - உஞ்ஞை:35/239,240 குன்றி செம் கண் இன் துணை பேடை - மகத:6/11 அற்று அன்றாயின் கொற்றம் குன்றி தொடி கெழு தோளி சுடு தீ பட்டு என - மகத:8/105,106 குன்றி நீ துயர் உறுக என உரைத்தனன் கொதித்தே - பால-மிகை:9 14/4 குருடு ஈங்கு இது என்ன குறிக்கொண்டு கண்ணோட்டம் குன்றி அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அ அந்தகாரம் - ஆரண்:10 139/3,4 குன்றி நிகர்ப்ப குளிர்ப்ப விழிப்பாள் - ஆரண்:14 48/2 முரண் தடம் தண்டும் ஏந்தி மனிதரை முறையை குன்றி பிரட்டரின் புகழ்ந்து பேதை அடியரின் தொழுது பின் சென்று - யுத்3:27 163/1,2 குன்றி வெம் கண் குதிரை குதிப்பன - யுத்4:37 33/2 குன்றி ஆசுற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில் - யுத்4:37 206/3 துப்பொடு ஒத்தன முத்துஇனம் குன்றியின் தோன்ற - யுத்3:20 53/4 பாடல் - குன்னிமுத்து….. குழலி முத்து…. கோட்டியப்பன்….. தங்கச்சி முத்து…. யாரடிச்சா…. யவரடிச்சா…. உருண்டே…. உருண்டே…. உருண்டே….
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்