சொல் பொருள்
(பெ) 1. ஒலி, ஓசை, 2. பூங்கொத்து, 3. கதிர், 4. செழுமை 5. பெண்களின் கூந்தல்,
சொல் பொருள் விளக்கம்
ஒலி, ஓசை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sound, voice, cluster of flowers, er of corn, Plenteousness, abundance, women’s hair
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி – பெரும் 156 புலி(யின் முழக்கம் போன்ற) ஓசையையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து நெடும் குரல் பூளை பூவின் அன்ன – பெரும் 192 நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல் – மலை 108 கொய்யப்படும் பக்குவம் பெற்றன பிணைந்துகிடக்கும் கதிர்களையுடைய தினை குரல் கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான் உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் – கலி 144/12,13 செழுமையான கூந்தலையுடையவளே! உன்னைப் பார்த்ததால் எனக்கு நேர்ந்த துன்பத்தை உனக்கு நான் உரைக்கும் வரையிலாவது என் இனிய உயிர் என்னிடம் இருக்கிறதே’ சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ – அகம் 8/16 பின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்