குருகிலை என்பது ஒரு வகை அத்தி.
1. சொல் பொருள்
(பெ) ஒரு வகை அத்தி
2. சொல் பொருள் விளக்கம்
குருகு போல வெண்ணிறத்தில் பூக்கும் பூ குருகிலை
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
white fig, Ficus virens Ait, Atalantia Missions, Oliv.?
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குருகிலை மருதம் விரி பூ கோங்கம் – குறி 73 குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு மலர்/அதன் மரம் குருகிலை பூத்தன கானம் பிரிவு எண்ணி - கார்40:27/2 பெய்ய முழங்கத் தளிர்க்கும், குருகிலை - நான்மணி. 37 மழை பொழியும் இடி முழக்கத்தால் குருகிலை தளிர்க்கும். அருளி அதிரக் குருகிலை பூப்ப - திணைமொழி ஐம்பது பாடல் 30 அஞ்சனம் காயா மலர குருகிலை ஒண் தொடி நல்லார் முறுவல் கவின் கொள - திணை50:21/1,2 வானம் இடி முழங்குகிறது; முருகன் திருவிழா முழக்கம் போல முழங்குகிறது. காடெல்லாம் குருகிலைப் பூ பூத்துக் குலுங்குகிறது. இவ்வாறு தலைவி கூறுகிறாள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்