சொல் பொருள்
ஒரு வகைக் கொடி, கூதாளி
சொல் பொருள் விளக்கம்
ஒரு வகைக் கொடி, கூதாளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Convolvulus, Ipomea
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இது கொடி வகையைச் சேர்ந்தது கூதள மூது இலை கொடி நிரை தூங்க – அகம் 255/14 கூதாளியின் முதிய இலைகளையுடைய கொடிகளின் கூட்டத்தில் கிடந்து குளிர்காலத்தில் மலரும். கூதிர் கூதளத்து அலரி நாறும் – நற் 244/2 கூதிர்காலத்துக் கூதளத்தின் பூக்களுடைய மணத்தைக் கொண்ட, ஆண்கள் மாலையாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர். குளவியொடு கூதளம் ததைந்த கண்ணியன் – நற் 119/8,9 காட்டு மல்லிகையுடனே கூதளத்து மலரையும் நெருக்கமாய்ச் சேர்த்துக்கட்டிய தலைமாலையை உடையவன் மலையகத்து மக்கள் காட்டு மல்லிகையோடு இதனையும் வீட்டில் வளர்ப்பர் அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை ————- கூதளம் கவினிய குளவி முன்றில் – புறம் 168/1-12 அருவி ஒலிக்கும் மூங்கில் நிறைந்த அகன்ற இடத்தில் ————- கூதாளி கவின் பெற்ற மலை மல்லிகை நாறும் முற்றத்தில் இதில் வெண்கூதாளம் என்று ஒரு வகையும் உண்டு. பைம் புதல் நளி சினை குருகு இருந்தன்ன வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து அலங்கு குலை அலரி தீண்டி தாது உக – அகம் 178/8-10 பசிய புதரிலுள்ள செறிந்த கிளைகளில் வெள்ளையான நாரை இருந்ததைப் போல வளம் பொருந்திய முகை விரிந்த வெள்ளைக் கூதாளத்தின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்