Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

பழிபாவம்

சொல் பொருள் பழி – பொருந்தாச் செயல் செய்தலால் இம்மையில் உண்டாகும் பழிப்பு.பாவம் – தீவினை செய்தலால் மறுமையில் உண்டாகும் தீயநிகழ்வு. சொல் பொருள் விளக்கம் பழி-வசைச்சொல்; பழியஞ்சித்தேடிப் பகுத்துண்ண வேண்டும் என்பார் வள்ளுவர்.… Read More »பழிபாவம்

பழக்க வழக்கம்

சொல் பொருள் பழக்கம் – ஒருவர் பல்கால் செய்து வருவது பழக்கம்.வழக்கம் – பலரும் பலகாலம் கடைப்பிடியாகக் கொண்டது வழக்கம். சொல் பொருள் விளக்கம் வழக்கம் என்பது மரபு ஆகும். அது வழிவழி வழங்கி… Read More »பழக்க வழக்கம்

பயிர் பச்சை

சொல் பொருள் பயிர் – தவசம் விளையும் பயிர்வகை.பச்சை – பயறு விளையும் செடி கொடி வகை சொல் பொருள் விளக்கம் நெற்பயிர், சோளப்பயிர் என்பவற்றால் பயிர் தவச வகைக்காதல் விளங்கும். பயற்றுக்கொடிகளில் பச்சை… Read More »பயிர் பச்சை

பம்பை பரட்டை

சொல் பொருள் பம்பை – செறிந்து நீண்டு தொங்கும் முடி.பரட்டை – உலர்ந்து அகன்று நிமிர்ந்த முடி சொல் பொருள் விளக்கம் பம்பை பரட்டை என்பது குழந்தைகள் விளையாட்டுப் பாடலின் முதலடி. பம்பைத் தலை… Read More »பம்பை பரட்டை

பண்டாரம் பரதேசி

சொல் பொருள் பண்டாரம் – துறவியரும் துறவிக் கோலத்தாரும்.பரதேசி – இரந்துண்டு வாழ்பவர். சொல் பொருள் விளக்கம் பண்டாரம் பரதேசிக்கு உணவிடுவது அறம் என்பது நெடுநாள் வழக்கம். பண்டாரம் என்பவர் துறவுத் தோற்றத்தாராம். பரதேசி… Read More »பண்டாரம் பரதேசி

பட்டும் படாமல்

சொல் பொருள் படுதல் – நெருங்குதல்படாமை – நெருங்காமை சொல் பொருள் விளக்கம் நெருங்குவது போல் நெருங்கி, நெருங்காமல் வாழ்பவரைப் பட்டும் படாமல் வாழ்பவர் என்பர். தொட்டும் தொடாமல் வாழ்பவர் என்பதும் வழக்கு. தாமரை… Read More »பட்டும் படாமல்

பட்டி தொட்டி

சொல் பொருள் பட்டி – ஆடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் ஊர்.தொட்டி – மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் ஊர். சொல் பொருள் விளக்கம் ஊரெல்லாம் ‘பட்டிதொட்டி’ என்பதொரு தனிப்பாட்டு. பட்டி தொட்டி என்னும் இணைச் சொல்… Read More »பட்டி தொட்டி

பச்சை பதவல்

சொல் பொருள் பச்சை – சிறிதும் காயாத ஈரம் உடையது.பதவல் – சற்றே காய்ந்து ஈரப்பதமுடையது. சொல் பொருள் விளக்கம் பச்சை பதவலை அடைத்து வைத்தால் வெந்து போகும்; பூஞ்சணம் பிடித்தும் போகும்; உலரப்போடு… Read More »பச்சை பதவல்

பச்சை பசப்பு

சொல் பொருள் பச்சை – வளமை அல்லது பசுமைபசப்பு – ஏய்ப்பு, அல்லது ஒப்பிதம். சொல் பொருள் விளக்கம் பச்சைபசப்புக் காரன் என்று ஏய்ப்பவரைக் குறிப்பர். தம் பசுமையைக் காட்டி ஏய்ப்பாரும், இல்லாததும் பொல்லாததும்… Read More »பச்சை பசப்பு

பங்குபாகம்

சொல் பொருள் பங்கு – கையிருப்பு தவசம் முதலியவற்றைப் பிரித்தல்.பாகம் – வீடு மனை நிலபுலம் முதலியவற்றைப் பிரித்தல். சொல் பொருள் விளக்கம் சொத்து நிலை பொருள் என்றும் அலை பொருள் என்றும் இருவகையாம்.… Read More »பங்குபாகம்