Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

முட்டுப்படுதல்

சொல் பொருள் முட்டுப்படுதல் – வறுமை சொல் பொருள் விளக்கம் முட்டுப்படுதல் வறுமை, முட்டுப்பாடு என்பதும் அது. தட்டுப்பாடு என்பது சிற்றளவு வறுமை, முட்டுப்பாடு பேரளவு வறுமையாம். எங்கெங்கும் கேட்டும் எதுவும் பெறமுடியாமல் என்… Read More »முட்டுப்படுதல்

முட்டிக் குனிதல்

சொல் பொருள் முட்டிக் குனிதல் – பட்டறிவு இல்லாமை சொல் பொருள் விளக்கம் உயரங்குறைந்த வாயில்களைக் கடப்பார் புதுவராயின் முட்டிக் கொள்வர். பின்னர்க் குனிந்து செல்லப் பழகிப் போவர். இது முட்டிக் குனிதலாம். இவ்வாறே… Read More »முட்டிக் குனிதல்

முகமூடியை உடைத்தல்

சொல் பொருள் முகமூடியை உடைத்தல் – மறைப்பை வெளிப்படுத்தல் சொல் பொருள் விளக்கம் முகத்திரையைக் கிழித்தல், மூடு திரையைக் கிழித்தல் என்பவும் இப்பொருளவே. திரையைக் கிழித்தற்கும் இவ்வுடைத்தற்கும் வினை வேறுபாடு உண்டு. அது துணியைச்… Read More »முகமூடியை உடைத்தல்

முகங்கொடுத்தல்

சொல் பொருள் முகங்கொடுத்தல் – பார்த்தல் சொல் பொருள் விளக்கம் செவிகொடுத்தல், கேட்டல் பொருள் தருவது போல முகங்கொடுத்தல் என்பது பார்த்தல் பொருளதாம். “முகங்கொடுத்துப் பார்க்கிறானா?” என்பதோர் ஏக்க வினா “முகங்கொடுத்தே பாராதவன் தானா/… Read More »முகங்கொடுத்தல்

முக்காடு போடல்

சொல் பொருள் முக்காடு போடல் – இழிவுறுதல் சொல் பொருள் விளக்கம் முக்காடுபோடுதல் சமயக் கோட்பாடாகக் கொண்டார் உளர். கைம்மைக் குறியாகக் கொண்டாரும் உளர். அவரை விலக்கிய முக்காடு இது. இந்நாளில் முக்காட்டு வழக்கெனக்… Read More »முக்காடு போடல்

மீளா உறக்கம்

சொல் பொருள் மீளா உறக்கம் – இறப்பு சொல் பொருள் விளக்கம் உறக்கம் விழிப்பு என்பவை மாறிமாறி நிகழ்பவை. ஆதலால் உறக்கம் மீளவும், விழிப்பு மீளவும் வருதலால் அவை மீளுறக்கம், மீள் விழிப்பு எனப்படும்.… Read More »மீளா உறக்கம்

மினுக்குதல்

சொல் பொருள் மினுக்குதல் – அணிகளால் மயக்கல் சொல் பொருள் விளக்கம் மின் – மினுகு – மினுக்கு என்பன ஒளியுடன் பளிச்சிடலைக் குறிப்பன. மினுக்குதல் என்பது பானை சட்டி முதலியவற்றின் அழுக்கினைப் போக்கத்… Read More »மினுக்குதல்

மாறல்

சொல் பொருள் மாறல் – ஏற்பாடு சொல் பொருள் விளக்கம் மாறுதல், மாறலாம். இம் மாறல் அப்பொருளில் மாறி ஏற்பாட்டுப் பொருளில் வருகிறது. கைம்மாறல், கைம்மாற்று என்பவை வழக்கில் உள்ளவை. கைம்மாறல் வாங்க முடியாத… Read More »மாறல்

மாரடித்தல்

மாரடித்தல்

மாரடித்தல் என்பதன் பொருள் சேர்ந்து செயலாற்றல் 1. சொல் பொருள் சேர்ந்து செயலாற்றல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் work, work as a team, Grief crying spells 3. சொல் பொருள் விளக்கம்… Read More »மாரடித்தல்

மாட்டிவிடல்

சொல் பொருள் மாட்டிவிடல் – சிக்கலுண்டாக்கல் சொல் பொருள் விளக்கம் ஒரு கொக்கியை மற்றொரு கொக்கியில் அல்லது மாட்டியில் மாட்டி விடுவது மாட்டல் ஆகும். மாட்டு எனச் சொல்லப்படும் இலக்கணம் பொருந்திய வகையால் தொடரை… Read More »மாட்டிவிடல்