தழும்பன் என்பவன் ஒரு வள்ளலான சிற்றரசன்.
1. சொல் பொருள்
(பெ) ஒரு வள்ளலான சிற்றரசன்.
2. சொல் பொருள் விளக்கம்
ஒரு வள்ளலான சிற்றரசன்,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
An ancient chief of the Tamil land, noted for his liberality;
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் – அகம் 227/17,18
பெண்யானை மிதித்த வழுதுணங்காய் போன்ற தழும்பினையுடையதால் வழுதுணைத் தழும்பன் என்னும் பெயர் கொண்டவனின்
காவல் பொருந்திய மதில் எல்லையையுடைய ஊணூருக்கு அப்பால்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் – நற் 300/10
அழகினைக் கொண்ட தழும்பனின் ஊணூர் என்னுமிடத்தில்
வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன – புறம் 348/5
உண்மையே பேசும் தழும்பன் என்பவனின் ஊணூர் என்ற ஊரினைப் போன்ற,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்