சொல் பொருள்
1. (வி) 1. அலை, உலுக்கு, 2. தடைப்படுத்து,
2. (பெ) தேற்றம், உறுதி,
தெற்று – எழும்புதல்,
சொல் பொருள் விளக்கம்
தெற்றி என்பது திண்ணை என்னும் பொருளது. நில மட்டத்திற்கு மேலே திண்ணிதாய் அமைக்கப்பட்டதே திண்ணை என்பதாம். தெற்றுப்பல் என்றால் இயல்பான பல்வரிசையை விடுத்துமேலே எழும்பி நிற்கும் பல்லைக் குறிப்பதாம். தெற்று ‘தென்’ என்பதன் வழிவந்ததாம். தென், தென்னை, தென்னுதல் என்பவை வளைதல் பொருளுடையதாகி, அவை நிரம்ப வளர்ந்த திக்கிற்குப் பெயராயிற்று. தெற்கு ‘தென்’ ‘தெங்கு’ என்பவை அறிக.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shake, disturb, obstruct, certainty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்று என குவைஇய குன்றா குப்பை கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் சாலி நெல்லின் – பொரு 244-246 மலை என்னும்படி குவித்த குறையாத நெற்பொலி உலுக்கிக் குலுக்கிக் கட்டிய மூடைகள் வெற்றிடம் இல்லையாகும்படி (எங்கும்)கிடக்கும், செந்நெல் விளைந்துநின்ற இமையாது இரை நசைஇ கிடந்த முது வாய் பல்லி சிறிய தெற்றுவது ஆயின் பெரிய ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் நின்று ஆங்கு பெயரும் கானம் – அகம் 387/15-19 கண்ணிமையாது உணவை வேட்டுக்கிடந்த முதுமை வாய்ந்த பல்லி சிறிய அளவில் தடைப்படுத்துவதாயின், பெரிய நெற்றிப்பட்டம் அணிந்த யானையில் செல்லும் அரசராயிருப்பினும் மேற்செல்லாமல் திரும்பிச் செல்லும் கானம் இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல் தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் – அகம் 328/7,8 இனிமையாகப் பொருந்திய நட்பினை அவர் பின் வெறுத்தல் உறுதியாவதை நாம் நன்கு உணர்வேமாயின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்