சொல் பொருள்
தோப்பு – திட்டமிட்டு வளர்க்கப் பட்ட ஒரு வகை மரங்களோ பல வகை மரங்களோ உடைய தொகுப்பு.
கூப்பு – திட்டமிடுதல் இல்லாமல் இயற்கையாகச் செறிந்து வளர்ந்துள்ள மலைக்காடு.
சொல் பொருள் விளக்கம்
தொகுப்பு என்பது தோப்பு ஆயிற்றாம், பகுப்பது ‘பாத்தி’யாவது போல. கூப்பு என்பது குவிப்பு என்பதிலிருந்து வந்ததாம். குவி, குவிதல், குவிப்பு, குமி, குமிதல், குமிப்பு என்பவற்றையும் கருதுக. “தோப்புக் காடும் கூப்புக் காடும்” என்பது வழக்கு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்