Skip to content

சொல் பொருள்

நழுவு, இறுக்கம் தளர், மெலி, சேதப்படு, (அழகு) குன்று, இளகு, மனமிரங்கு

சொல் பொருள் விளக்கம்

நழுவு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

slip off as a garment, loosen, unfasten, grow lean, get weaken, be impaired, wear away, wither, melt, grow tender, to relent

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
————— —————— —————–
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே – நற் 70/1-9

சிறிய வெள்ளைக் குருகே! சிறிய வெள்ளைக் குருகே!
—————- —————– ——————
வயல்களையுடைய நல்ல ஊரினையுடைய எனது காதலரிடம் சென்று என்னுடைய
அணிகலன்கள் கழன்று நழுவிப்போகும் துன்பத்தை இதுவரை சொல்லாதிருக்கின்றாய்

பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள – கலி 32/5

கட்டுகள் தளர்ந்து மலர்ந்த வேங்கையின் விரிந்த பூக்கள் உதிர்ந்து மணம் பரப்ப

ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி
ஓர் யான் ஆகுவது எவன்கொல்
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே – அகம் 82/16-18

அரிய இருள் செறிந்த இரவில் தலையணையின்கண் சேர்ந்து,
நான் ஒருத்தி மட்டுமே இப்படி ஆகிப்போனது என்னவோ,
நீர் சொரியும் கண்களோடு மெலிந்துபோன தோளையுடையவளாக

மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும் – அகம் 197/1,2

கரிய குவளை மலரின் அழகினை இழந்த கண்களும்
அழகு குன்றி திரைந்துபோன தலையணை போன்ற மெலிந்த தோள்களும்

நெஞ்சு நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்து
அறாஅ வஞ்சினம் செய்தோர் – அகம் 267/1,2

நம் நெஞ்சம் இளகத்தக்கனவற்றைக் கூறி அன்பினால் உள்ளம் கலந்து
தாம் என்றும் பிரியாமைக்குரிய சூளுறவு செய்தோராகிய நம் தலைவர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *