சொல் பொருள்
ஒரு அயல் பெண்
சொல் பொருள் விளக்கம்
ஒரு அயல் பெண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
some stranger woman
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துகிலிகை அன்ன துய் தலை பாதிரி வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி புது மலர் தெருவு-தொறு நுவலும் நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே – நற் 118/8-11 வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரியின் வெண்மையான இதழ்களையுடைய மலர்களில் வண்டுகள் மொய்க்கும்படி ஏந்திக்கொண்டு புதிய மலர்களைத் தெருக்கள்தோறும் கூவிவிற்கும் யாரோ ஒரு பெண்ணுக்காக நோகின்றது என் நெஞ்சம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்