சொல் பொருள்
(பெ) 1. அறிவு, 2. அறிவுள்ளோர், புலவர், 3. புலம், விளைநிலம்
சொல் பொருள் விளக்கம்
1. அறிவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wisdom, intelligence, wise men, poet, arable land
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த என்னும் நாணும் நன்_நுதல் உவப்ப வருவை ஆயினோ நன்றே – நற் 375/4-6 உமக்கு எம்மீது அன்பு இல்லை; ஆதலினால், அவளுடைய அறிவின்வழியே ஒழுகுகின்ற என்னிடத்தில் கூடத் தன் விருப்பத்தை வெளிப்படையாகக் கூற வெட்கப்படும் இந்த நல்ல நெற்றியையுடையாள் மகிழும்படி – நீ மணம்பேச வருவாயானால் மிகவும் நல்லது; நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/17,18 நிலத்தின் பெருமை உலகோர் நாவில் நடமாடும் நீண்ட மாடங்களைக் கொண்ட கூடல்மாநகரத்தவர் புலவர் நாவில் பிறந்த பாடல்களைப் புதிதுபுதிதாய்க் கேட்டு இன்புறும் காலம் அன்றோ? மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா – பதி 25/1 உன் குதிரைப்படைகள் பாய்ந்துசென்ற நிலங்களில் கலப்பைகள் உழுதுசெல்லமாட்டா;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்