சொல் பொருள்
(பெ.அ) பெயரைக்கொண்ட,
(வி.எ) பெயர்த்தெடுத்த
சொல் பொருள் விளக்கம்
பெயரைக்கொண்ட,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which bears the name
lifted.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 18 நாவலின் பெயர்பெற்ற சாம்பூந்தமென்னும்பொன்னால் செய்த ஒளிரும் அணிகலன்களையும் மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய பனி நீர் படுவின் பட்டினம் படரின் – சிறு 152,153 (நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும், மதிலின் பெயர்கொண்ட, குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின் நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 82 நாளின் பெயர் கொண்ட கோள்(உத்தரம்) நன்றாக வடிவமைக்கப்பட்ட சிறந்த (குறுக்குக்)கட்டையைக்கொண்டு கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 114 கருவோடு பெயர்பெற்ற காட்சிக்கினிய நல்ல இல் (கர்ப்பக் கிருகம் – கருவறை) – (அதனுள்ளே) பந்தர் பெயரிய பேர் இசை மூதூர் – பதி 67/2 பந்தல் என்ற பெயரைக் கொண்ட பெரிய புகழ்படைத்த முதிய ஊரைச் சேர்ந்த கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து – பதி 88/2 விந்தை என்னும் கொற்றவையின் பெயரைக் கொண்ட விந்தாடவி என்ற காட்டோடு இருக்கும் விந்திய மலை உயர்ந்து நிற்க கேழல் திகழ்வர கோலமொடு பெயரிய ஊழி ஒரு வினை உணர்த்தலின் – பரி 2/16,17 பன்றியின் சிறப்பான கோலத்தின் பெயரைக் கொண்ட வராக கற்பம் என்னும் இந்த ஊழிக்காலம் உனது ஒரு திருவிளையாடலை உணர்த்துவதால் புள்ளொடு பெயரிய பொருப்பு புடை திறந்த வேல் – பரி 21/9 கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயர்கொண்ட மலையினைப் பிளந்த வேல்; தோல் பெயரிய எறுழ் முன்பின் – புறம் 7/6 யானையையும் பெயர்த்த மிக்க வலியினையுமுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்