பொய்கை என்பது இயற்கையாக அமைந்த சிறிய நீர்த்தேக்கம்
1. சொல் பொருள்
(பெ) இயற்கையாக அமைந்த சிறிய நீர்த்தேக்கம்,
2. சொல் பொருள் விளக்கம்
இயற்கையாக அமைந்த சிறிய நீர்த்தேக்கம்,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
natural pond
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர – மது 171,172
செங்கழுநீர் மிக்க இடம் அகன்ற பொய்கைகளில்
யானை(யும்) மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகங்கோரையும் நெருங்கி வளர,
நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த – சிறு 68
முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை/குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர் – பெரும் 294,295
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை/களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர – மது 171,172
வண்டு இறைகொண்ட கமழ் பூ பொய்கை/கம்புள் சேவல் இன் துயில் இரிய – மது 253,254
போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை/தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு – மது 654,655
வரி அணி சுடர் வான் பொய்கை/இரு காமத்து இணை ஏரி – பட் 38,39
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை/கொழும் கால் புதவமொடு செருந்தி நீடி – பட் 242,243
வாடா பூவின் பொய்கை நாப்பண் – நற் 16/5
மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்க – நற் 115/1
பொய்கை ஊர்க்கு போவோய் ஆகி – நற் 200/7
கயல் கணம் கலித்த பொய்கை ஊர – நற் 230/5
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி – நற் 290/7
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் – நற் 390/2
பொய்கை ஊரன் கேண்மை – குறு 61/5
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்கு – குறு 113/1
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர் – குறு 354/4
பொய்கை ஆம்பல் அணி நிற கொழு முகை – குறு 370/1
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை – ஐங் 6/4
பொய்கை பூத்த புழை கால் ஆம்பல் – ஐங் 34/2
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் – ஐங் 35/2
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்பு – ஐங் 44/1
நெடு நீர் பொய்கை துடுமென விழூஉம் – ஐங் 61/2
பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய் – ஐங் 63/1
மா நீர் பொய்கை யாணர் ஊர – ஐங் 70/3
மலர் அணி வாயில் பொய்கை ஊர நீ – ஐங் 81/3
வண் துறை நயவரும் வள மலர் பொய்கை/தண் துறை ஊரனை எவ்வை எம்-வயின் – ஐங் 88/1,2
வெறி மலர் பொய்கை ஆம்பல் மயக்கும் – ஐங் 91/2
பொய்கை ஊரன் மகள் இவள் – ஐங் 97/3
பொய்கை பூவினும் நறும் தண்ணியளே – ஐங் 97/4
புனல் வாயில் பூ பொய்கை/பாடல் சான்ற பயம் கெழு வைப்பின் – பதி 13/8,9
பொய்கை வாயில் புனல் பொரு புதவின் – பதி 27/9
குளிர் பொய்கை அளறு நிறைய – பரி 8/93
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு – கலி 17/11
புணர்ந்தவர் முகம் போல பொய்கை பூ புதிது ஈன – கலி 31/5
பூ பொய்கை மறந்து உள்ளா புனல் அணி நல் ஊர – கலி 66/8
போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட – கலி 69/1
மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் – கலி 70/1
பொய்கை பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த – கலி 74/1
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான் மொய் தப – கலி 78/7
பழன பொய்கை அடைகரை பிரம்பின் – அகம் 96/3
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர் – அகம் 117/17
பனி மலர் பொய்கை பகல் செல மறுகி – அகம் 146/2
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் – அகம் 181/18
பன் மலர் பொய்கை படு புள் ஓப்பும் – அகம் 204/11
நெடு நீர் பொய்கை துணையொடு புணரும் – அகம் 246/3
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த – அகம் 276/1
பரந்த பொய்கை பிரம்பொடு நீடிய – அகம் 306/2
துறை மீன் வழங்கும் பெரு நீர் பொய்கை/அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு – அகம் 316/1,2
தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன் – அகம் 336/10
மிகு பெயல் நிலைஇய தீம் நீர் பொய்கை/அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் – அகம் 357/13,14
பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து – அகம் 386/1
பொய்கை நாரை போர்வில் சேக்கும் – புறம் 209/1
நெடு நீர் பொய்கை பிறழிய வாளை – புறம் 287/8
பொய்கை மேய்ந்த செ வரி நாரை – புறம் 351/9
வயல் அமர் கழனி வாயில் பொய்கை/கயல் ஆர் நாரை உகைத்த வாளை – புறம் 354/4,5
பொய்கை பூ முகை மலர பாணர் – புறம் 398/4
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்கு/சேய்த்தும் அன்றே சிறு கான்யாறே – குறு 113/1,2
வெண் பூ பொய்கைத்து அவன் ஊர் என்ப அதனால் – ஐங் 41/2
நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே – புறம் 246/15
பொய்கையும் போது கண் விழித்தன பைபய – புறம் 397/3
ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள்/நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/14,15
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள்/துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார – கலி 71/3,4
ஒரு நிலை பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின் – பரி 8/15
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்