சொல் பொருள்
(பெ) 1. பொருவார், பகைவர், 2. கூத்தர்
சொல் பொருள் விளக்கம்
பொருவார், பகைவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enemy, foe, actors, dancer-singers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொருநர் தேய்த்த போர் அரு வாயில் – திரு 69 பொருவாரை இல்லையாக்கிய போர்த்தொழில் அரிதாகிய வாயிலினையும் இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு நன் கலன் ஈயும் நாள்_மகிழ் இருக்கை அவை புகு பொருநர் பறையின் ஆனாது கழறுப என்ப அவன் பெண்டிர் – அகம் 76/3-6 இனிய கடிய கள்ளினையுடைய அஃதை என்பானது யானைகளையும் நல்ல அணிகளையும் (பரிசிலர்க்கு) வழங்கும் மகிழ்ச்சிபொரிந்திய நாளோலக்கத்தையுடைய அவையில் புகும் பொருநரது பறையைப் போல ஒழியாது என்னை இகழ்வர் என்று கூறுவர் அவன் பெண்டிர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்