சொல் பொருள்
(பெ) 1. நெற்கதிரின் போர், கதிருடன் நெல்லை அறுத்துக் குவித்த குவியல், 2. குவியல்,
சொல் பொருள் விளக்கம்
நெற்கதிரின் போர், கதிருடன் நெல்லை அறுத்துக் குவித்த குவியல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stack of straw with paddy
stack, heap
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து கள் ஆர் களமர் பகடு தளை மாற்றி – அகம் 366/2,3 நீர் சூழ்ந்த அகன்ற களம் பொலிவுறப் போரினைப் பிரித்துக் கடாவிட்டு பின் கள் உண்டு வந்த உழவர் அக் கடாக்களைக் கட்டவிழ்த்துவிட்டு பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு கண நரியோடு கழுது களம் படுப்ப – புறம் 369/15,16 பேய்மகளிர் மொய்த்துச் சூழும் பிணங்கள் குவித்துவைக்கப்பாடு உயர்ந்த பல குவியலான போர்களை கூட்டமான நரிகளும் பேய்களும் இழுத்து உண்ண
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்