சொல் பொருள்
(பெ) 1. திருமணம், மணவிழா,
2. நறுமணம்,
சொல் பொருள் விளக்கம்
திருமணம், மணவிழா,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
marriage, wedding
fragrance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இருவேம் ஆய்ந்த மன்றல் இது என – குறி 21 தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது என்று கூடல் மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ – பரி 8/30 கூடல்நகரில் மணவிழா பொருந்திய மணிநிற முரசுகளின் முழக்கம் எழ, கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப கொடி மலர் மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற – பரி 8/24,25 கொன்றை மரங்களில் கொடி போன்று பூங்கொத்துக்ள் மலர்ந்திருக்க, கொடிகளில் மலர்கள் நறுமணம் உடையவாய் மலர்ந்திருக்க, மலரான காந்தள் இடமெல்லாம் மணக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்