சொல் பொருள்
(வி) 1. சிதைவுறு, 2. களங்கமடை,
சொல் பொருள் விளக்கம்
சிதைவுறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be injured, spoiled, get stained
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாகால் என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்வழி முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன் – கலி 73/12-15 சுழலுகின்ற மைதீட்டிய கண்களையுடைய பரத்தையரின் அழகிய மாலைகளைத் துவளச் செய்த உன் மலர்ந்த மார்பில் பூசிய கலைந்துபோன சந்தனம் வந்து சொல்லாதபோது; எப்படிப்பட்ட தவறுகளை நீ செய்தாலும் அதைப் பற்றிப் பேசமாட்டாதார் இல்லாதபோது காலுக்கு முன்னால் பணிந்து எம் சினத்தைத் தீர்ப்பதற்கு வருவாய் – பரதவர் எறி உளி பொருத ஏமுறு பெரு மீன் புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட – அகம் 210/1-3 பரதவரால் எறியப்பட்ட உளி தாக்கிய களிப்புப் பொருந்திய பெரிய மீன் தன் புண்ணிலிருந்து ஒழுகிய உதிரத்தால் புலால் நாறும் கடல் நீர் களங்கமடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்