1. சொல் பொருள்
(பெ.அ) மற்ற, பிற, ஏனைய,
2. சொல் பொருள் விளக்கம்
மற்ற, பிற, ஏனைய,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
other
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கடவுள் வழங்கும் கையறு கங்குலும் அச்சம் அறியாது ஏமம் ஆகிய மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 651-653 தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும், அச்சத்தை அறியாமல் காவலையுடைய மற்ற யாமத்தை (அடுத்துவந்த நடு யாமத்தினின்றும்)பகுத்தல் உண்டாகப் போக்கி, மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து – கலி 138/8,9 நீலமணி போன்ற பீலியைக் கட்டிய நூலில், ஏனைய அழகிய பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்