Skip to content

சொல் பொருள்

1. (வி) மின்னு, விளங்கு, ஒளிர், பிரகாசி,

2. (பெ) 1. ஒளி, சுடர், பிரகாசம், 2. மின்னல்,

3. (இ.சொ) முன்னிலை ஏவல் பன்மை விகுதி, 

சொல் பொருள் விளக்கம்

மின்னு, விளங்கு, ஒளிர், பிரகாசி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

glitter, shine, gleam, sparkle

light, flash, glitter

lightning

A verbal suffix of the imperative plural;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு – மலை 5

விளங்குகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும் சேர்த்து
 மின் இரும் பீலி – மின்னுகின்றதும், கருநிறமமைந்ததுமாகிய மயிலிறகு – பொ.வே.சோ. உரை

மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 168,169

ஒளி மின்னும்
நெற்றிப்பட்டத்தோடு பொலிவு பெற்ற போர்த்தொழிலைப் பயின்ற யானையின்

மின் நேர் மருங்குல் குறு_மகள் – அகம் 126/21

மின்னலையொத்த இடையினையுடைய இளைய தலைவியின்

கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 262

கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்

சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே – பரி 15/34,35

இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே புறம் 97/25

எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என – அகம் 217/14

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *