சொல் பொருள்
உணவை வாய் நிறைய இட்டு உண்
சொல் பொருள் விளக்கம்
உணவை வாய் நிறைய இட்டு உண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
eat in large mouthfuls
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர் – நற் 22/5,6 சுருக்கம்விழுந்த கன்னத்து மயிர்களையுடைய வளைந்த உள்வாய் நிறைய அமுக்கிக்கொண்டு வானிலிருந்து விழுகின்ற மழையில் நனைந்த முதுகினையுடையவாய், நோன்பிருப்போர் கழனி ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் பாசவல் முக்கி தண் புனல் பாயும் – புறம் 63/11-13 வயலிடத்து ஆம்பல் தண்டினால் செய்த வளையணிந்த கையையுடைய மகளிர் செம்மையான அவலை வாய் நிறையக் கொண்டவராய் குளிர்ந்த நீரில் பாய்ந்தாடுவர் தத்திங்கம் தத்திங்கம் கொட்டுவாளாம் தயிரும் சோறும் தின்பாளாம் ஆப்பம் சுட்டால் தின்னுவாளாம் அவல் இடிச்சால் முக்குவாளாம் என்ற இந்த நாட்டுப்புறப்பாடலை எடுத்துக்காட்டுவார் ஔவை.சு.து. அவர்கள் தம் புறநானூறு உரை விளக்கத்தில்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்