முடியன் என்பவன் ஒரு சங்க காலச் சிற்றரசன்.
1. சொல் பொருள்
(பெ) சங்க காலச் சிற்றரசன்/வள்ளல்
2. சொல் பொருள் விளக்கம்
இவன் தென்னார்க்காடு மாவட்டத்துத் திருக்கோவலூர் வட்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த ஒரு வள்ளல்
என்பார் ஔவை.சு.து, தம் உரை விளக்கத்தில். இவன் பெயரைத் தாங்கிய முடியனூர் என்னும் ஊர் இன்றும்
உள்ளது. இம் முடியனுக்குரிய மலைகள் கள்ளக்குறிச்சிப் பகுதியில் உள்ளன.
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முடியன் என்றது மலையமான் திருமுடிக்காரியை
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a chieftain/philanthropist of sangam period
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வாளை வாளிற் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயிலேற்குங்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல்வெள் ளாம்பலுருவ நெறித்தழை
யைதக லல்குலணிபெறத் ததைஇ
விழவிற் செலீஇய வேண்டுமன்னோ
யாணரூரன் காணுநனாயின்
வரையாமையோ வரிதேவரையின்
வரைப்போல் யானை வாய்மொழி முடியன்
வரைவேய் புரையு நற்றோ
ளளிய தோழி தொலையுநபலவே – நற் 390/9-11
மலை போலத் தோன்றும் யானைகளையும், வாய்மையான சொற்களையும் உடைய முடியன் என்பானின்
மலையில் உள்ள மூங்கிலைப் போன்ற பிற பெண்களின் நல்ல தோள்கள்
இரங்கத்தக்கன தோழி, தம் அழகினையும் இழப்பன மிகப் பல.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்