சொல் பொருள்
(பெ) 1. முறிவு, உடைபாடு, 2. முழக்கம், அதிர்வொலி
சொல் பொருள் விளக்கம்
1. முறிவு, உடைபாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
break, as of the mouth of a mud pot
reverberation, resonance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பெரும் 99 விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி முரவு வாய் – இதனை ஒறுவாய்ப்போன பானை என்பர் நச்சினார்க்கினியர். இக்காலத்தார் மூளிப்பானை என்று வழங்குப – பொ.வே.சோ. விளக்கம் முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் – அகம் 260/12 முதிய மரத்தின்கண் எப்போதும் நீங்காது தங்கும், முழக்கத்தையுடைய வாயையுடைய பேராந்தை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்