Skip to content

சொல் பொருள்

(பெ) 1. விறகு, 2. முள்ளுள்ள சுள்ளி,  3. தாமரை, 4. காடு,

சொல் பொருள் விளக்கம்

விறகு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

firewood, thorny twig (used by birds in building nests), Lotus, jungle

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 55

குளிர்ந்த மணமுள்ள சாந்துக்கட்டையை விறகாகக்கொண்டு நெருப்பை உண்டாக்கி

முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடை பேடை உணீஇய – நற் 384/3,4

முட்களைக்கொண்ட சுள்ளிக்குச்சியால் கட்டப்பட்ட அழகிய கூட்டில் குஞ்சுபொரித்து இளைத்துப்போன வருத்தமிக்க நடையைக் கொண்ட பெண்புறா உண்பதற்காக

முளரி கரியும் முன்பனி பானாள் – அகம் 163/8

தாமரை மலர் கரிந்திடும் முன்பனிக் காலத்துப் பாதியிரவில்

முளரி தீயின் முழங்கு அழல் விளக்கத்து – அகம் 301/13

காட்டுத் தீயில் எழுந்த ஒலிக்கும் தீயின் ஒளியில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *