Skip to content

சொல் பொருள்

  1. (பெ) ஒரு மரம் / பூ,

சொல் பொருள் விளக்கம்

(பெ) ஒரு மரம் / பூ,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 a species of tree/flower

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வடவனம், வாகை, வெண்ணிறப் பூவுடைய வெட்பாலைப்பூ,

கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டு என்னும் பத்துப்பாட்டு நூலில், குறிஞ்சி நில மகளிர் குவித்துவிளையாடியதாகக்
கூறும் 99 மலர்களின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது. இது துளசி என்பர். துளசி எனப்படும் துழாஅய்
என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என
அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு.
செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும்
சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி
எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம்.
– விக்கிப்பீடியா – https://ta.wikipedia.org/wiki/வடவனம்

இதனைப் பற்றிய குறிப்பு வேறு சங்க நூல்களில் இல்லை.

வடவனம்
ஆலமரம் – Indian banyan – Ficus benghalensis என்பார் உளர்.

வடவனம் என்பது திருநீற்றுப்பச்சை என்பார் சிலர்.
http://vaiyan.blogspot.com/2015/10/vadavanam-kurinjipattu.html

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர் (பக். 441) வடவனம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *