Skip to content

சொல் பொருள்

(பெ) சந்ததி, தலைமுறை,

(வி.அ) பின்னர்,

சொல் பொருள் விளக்கம்

சந்ததி, தலைமுறை, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

progeny, descendant, generation

afterwards

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உவரா ஈகை துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே – புறம் 201/10-12

வெறுப்பிலாத கொடையினையுடையராய்த் துவராபதி என்னும் படைவீட்டை ஆண்டு
நாற்பத்தொன்பது தலைமுறை தொன்றுபட்டு வந்த
வேளிருள்வைத்து வேளாயுள்ளாய்

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/13-15

நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம்
குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால்
குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்

புக்க_வழி எல்லாம் கூறு
கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை
காயாமை வேண்டுவல் யான் – கலி 82/5-7

நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக”;
“சொல்கிறேன், விரும்பிக்கேட்பது போல் கேட்டு அதன் பின்னே
வெகுளாதிருக்க வேண்டுகிறேன் நான்”

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *