சொல் பொருள்
(பெ) வாடிப்போனது, உலர்ந்துபோனது,
சொல் பொருள் விளக்கம்
வாடிப்போனது, உலர்ந்துபோனது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is dried
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் – அகம் 45/1 உலர்ந்த வாகைமரத்திலுள்ள விளைந்த நெற்றுக்களின் கொத்து இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு நிலவு நிற வெண் மணல் புலவ – குறு 320/2,3 இருண்ட கழியில் கொண்ட இறாவின் வற்றலோடு நிலவொளி போன்ற வெள்ளை மணற்பரப்பு புலால்நாறும்படி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்