சொல் பொருள்
வெம்மை, வெப்பம், தீங்கு, துன்பம், சூடானது
சொல் பொருள் விளக்கம்
வெம்மை, வெப்பம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
heat, sorrow, distress, that which is hot
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காழின் சுட்ட கோழ் ஊன் கொழு குறை ஊழின்ஊழின் வாய் வெய்து ஒற்றி – பொரு 105,106 இரும்புக் கம்பியில் (கோத்துச்)சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளை மாற்றி மாற்றி வாயின் (இடத்திலும் வலத்திலும்)(அத்தசைகளின்)வெப்பத்தை ஒற்றியெடுத்து மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி வெய்து இடை உறாஅது எய்தி முன்னர் – அகம் 203/13,14 விலங்குகள் செல்லும் நெறிகள் பின்னிக்கிடக்கும் மலையடியிற் சிறிய நெறிகளில் தீங்கு இடையே உண்டாகாதவாறு அவர்கட்கு முன்னரே சென்று சேர்ந்து நோயும் கைம்மிக பெரிதே மெய்யும் தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே – நற் 236/1,2 என் காதல் நோயும் கைமீறிப் பெரிதாகிவிட்டது; உடம்பும் நெருப்பு வெளிவிடும் வெம்மையைக்காட்டிலும் சூடானதாய் உள்ளது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்