Skip to content

சொல் பொருள்

 கிட, காலம்கழி, தங்கு, இரு, நிலைகொண்டிரு, விடி

சொல் பொருள் விளக்கம்

தங்கு, இரு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be lying, pass the time, stay, be, abide, abide

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும் – புறம் 229/21

காற்றுப்போலும் இயலையுடைய மனஞ்செருக்கிய குதிரைகள் கதியின்றிக் கிடக்கவும்

களம் மலி குப்பை காப்பு இல வைகவும் – புறம் 230/3

களத்தின்கண் நிறைந்த நெற்பொலி காவலின்றியே கிடப்பவும்

அகன் தலை வையத்து புரவலர் காணாது
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி – புறம் 371/1,2

அகன்ற இடத்தையுடைய நிலவுலகத்தின்கண் எம்மைப் பாதுகாக்கும் வேந்தரைக் காணப்பெறாமையால்
மன்றத்தின்கண் நிற்கும் மரத்தின் அடியிலே இருந்து பட்டினியால் கிடந்து

கள் மாறு நீட்ட நணிநணி இருந்த
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர் – புறம் 177/6-8

கள்ளை ஒருவர்க்கொருவர் மாறுமாறாக நீட்டிட, ஒன்றற்கொன்று அணித்தாயிருந்த
குறிய பல அரணின்கண்ணே இருந்து அக்கள்ளை நிரம்ப உண்டு காலங்கழித்து
பின்னைச் செருக்கினால் விடாய் மிக்குப் புளிச்சுவையை விரும்பிய சிவந்த கண்ணையுடைய ஆடவர்

நிழல் காண்-தோறும் நெடிய வைகி
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ – நற் 9/7,8

நிழல் கண்டவிடமெல்லாம் நெடுநேரம் தங்கி,
மணல் கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி மகிழ்ந்து விளையாடி

பாம்பு எறி கோலின் தமியை வைகி
தேம்புதி-கொல்லோ நெஞ்சே – அகம் 322/5,6

கோலால் எறியப்பட்ட பாம்பினைப் போல வேறு துணையின்றி இருந்து
வாடுகிறாயோ! நெஞ்சே!

பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து – மலை 99

மழையோடு (எப்போதும்)நிலைகொண்ட அகன்ற இடமாகிய பெரிய கொல்லை நிலத்தில்

கான யானை வெண் கோடு சுட்டி
மன்றோடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனை பாக்கத்து அல்கி வைகு உற – அகம் 245/11-13

வீட்டிலிருக்கும்) காட்டுயானையின் வெள்ளிய கொம்பை எடுத்து வருதல் குறித்து
மன்றின்கண் ஓடிவிளையாடும் புதல்வனுடைய புல்லிய தலையைத் தடவி ஏவும்
அரிய போர்முனைகளையுடைய பாக்கத்திடத்தே தங்கி, இருள் கழியும் விடியல் தோன்ற
– நாட்டார் உரை

வைகு உற என்பதற்கு வைகுதல் உற என்று பொருள்கொள்வார் ஔவை.சு.து.- புறம் 233- உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *