சொல் பொருள்
இருள்தங்கு, வைகுதலுறு, மறை, விடி, வைகறைப்பொழுது,
சொல் பொருள் விளக்கம்
வைகறைப்பொழுது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
darkness remain, (dawn) that stays, set, dawn, early dawn
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண் புலர் வைகுறு விடியல் போகிய எருமை – அகம் 100/15,16 தண்ணென்று புலர்ந்திடும் இருள்தங்கிய விடியற்காலத்தே போகிய எருமை – நாட்டார் உரை வைகுறு விடியல் இயம்பிய குரலே – புறம் 233/8 வைகுதலுற்ற விடியற்காலத்துச் சொல்லிய வார்த்தை வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர் கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று வைகுறு வனப்பின் தோன்றும் – நற் 163/10,11 ஆகாயத்திலே சென்ற, விளங்கிய ஒளியையுடைய, நெடிய சுடரையுடைய கதிரினாலே இருளைப் போக்கி எழுந்து உள்ளே கொதித்து, ஆதித்தனது பாடுசாய்கின்ற அழகுபோலத் தோன்றும் – பின்னத்தூரார் உரை வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர் கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று வைகுறு வனப்பின் தோன்றும் – நற் 163/9-11 ஒளிவிளங்கும் நெட்ய சுடர்களைக் கொண்ட கதிர்களைக் காய்ந்தபடியே வானத்தே மூழ்கிக்கிடந்த இருளினது செறிவைக்கண்டு உள்ளே கொதித்து விடியற்காலை வேளையிலே அதனைப் போக்குவதற்கு எழுகின்ற வைகறைப்போதின் வனப்பினோடும் கலந்து தோன்றும் – வைகுறு – விடியல் – புலியூர்க்கேசிகன் உரை, விளக்கம் – வைகுறு வனப்பின் தோன்றும் – appears like splendid daybreak – வைதேகி ஹெர்பெர்ட் மொழிபெயர்ப்பு புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூ வைகுறு மீனின் நினைய தோன்றி புறவு அணிகொண்ட பூ நாறு கடத்திடை – நற் 48/3-5 புல்லிய புறவிதழையுடைய கோங்கினுடைய மெல்லிய இதழ் மிக்க குடை போன்ற மலர்கள் எல்லாம் வைகறைபொழுதிலே விசும்பின்கண் விளங்குகின்ற மீன்களாம் எனக் கருதும்படி தோன்றாநின்று காடெங்கும் அழகமைந்த மலர் மணம்வீசும் கண்ணெறியிலே – பின்னத்தூரார் உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்