சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா – பாரதியார்
அகர வரிசை சொற்கள்
அகர வரிசை சொற்கள்
எந்த ஒரு சொல்லுமே ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமேயன்றி, அழிவுப்பாதைக்கு அழைப்பதாக இருக்கக்கூடாது.
எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, சிரத்தை, மும்முரமான உழைப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகியவை இருக்கவேண்டும்.
ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
தமிழ்ச் சொற்கள் பற்றிய தெளிவு தனிமனித விழிப்புணர்வுக்கும் தனிமனித வளர்ச்சிக்கும் தூண்டுதலாக அமையும்.
தமிழ்ச் சொற்கள் அல்லது இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.
சொல்வன்மை
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல். சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.