Skip to content

சொல் பொருள்

(வி) 1. செறிந்திரு, 2. தட்டி உருவாக்கு, தகடாகச்செய், 3. கொல்,

2. (பெ) தகடு

3. (பெ.அ) செறிவு மிக்க

சொல் பொருள் விளக்கம்

1. செறிந்திரு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be thick, be close together, mould by beating, kill, thin, flat metal plate, dense

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் – அகம் 181/23

விற்பாரது நறுமணப்பண்டங்கள் நாறுகின்ற வண்டுகள் செறிவாக மொய்க்கும் கூந்தல்

அடர் புகர்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி – புறம் 6/12,13

அடர்ந்த புகரினையுடைய
சிறு கண் யானையைத் தடையின்றி நேரே ஏவி

பொன் அடர்ந்து அன்ன ஒள் இணர் செருந்தி – அகம் 280/1

பொற்பூக்கள் நெருங்கியிருந்தாற் போன்ற ஒளிபொருந்திய கொத்துக்களையுடைய செருந்தி

அழல் புரிந்த அடர் தாமரை – புறம் 29/1

நெருப்பால் ஆக்கப்பட்ட தகடாகச் செய்த தாமரைப் பூவுடனே

நுண் உருக்கு_உற்ற விளங்கு அடர் பாண்டில் – மலை 4

கரைய உருக்குதலுற்ற விளங்கின தகடாகத் தட்டிய கஞ்சதாளமும்

ஐது அடர்ந்த நூல் பெய்து – புறம் 29/2

மெல்லிதாகத் தட்டிக் கம்பியாகச் செய்த நூலின்கண்ணே இட்டு

அல்லல் கூர்ந்து அழிவு_உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/15

துயரம் மிக்கு, மனம் அழிய, வருத்தி என்னைக் கொல்லுகின்ற காமநோயை

பொன் அடர் பூ புனை திருத்துவோரும் – பரி 12/12

பொன் தகட்டாலே செய்த பூவாகிய அணிகலன்களை அணிவோரும்

செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு – அகம் 9/4

செப்புத் தகட்டை ஒத்த சிவந்த தளிர்களிடந்தொறும்

உள்ளுநர் உட்கும் கல் அடர் சிறு நெறி – அகம் 72/17

கடக்க எண்ணுநர் அஞ்சும் கற்செறிவையுடைய இட்டிய நெறியில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *