Skip to content
அதிகன்

அதிகன் – வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி. இவன் அதிகன், அதியன், அதியமான், அதியமான் நெடுமான் அஞ்சி என்று அழைக்கப்படுவான்.

1. சொல் பொருள்

(பெ) சங்ககாலக் குறுநில மன்னர். 

2. சொல் பொருள் விளக்கம்

இந்த மன்னர் வழியில் வந்தவன் அஞ்சி எனப்படுபவன். இவன் அதியன், அதியமான், அதியமான் நெடுமான் அஞ்சி என்று அழைக்கப்படுவான். சங்கப்புலவரான ஔவையாருக்கு மிகவும் நெருங்கிய நண்பன். சேலம் மாவட்டம், தகடூரைத்(தருமபுரி) தலைநகராகக் கொண்டவன். அதியமான் நெடுமான் அஞ்சி இந்தக் கோவலூரைப் போரிட்டு அழித்தான் என்றும், அந்த வெற்றியைப் புலவர் பரணன் சிறப்பித்துப் பாடினார் என்றும் ஔவையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு 99)

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Athiyaman, a tamil chieftain of sangam period(ancient times)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடு மான் தோன்றல் நெடுமான்அஞ்சி
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல் – புறம் 206/6,7

விரைந்த குதிரையையுடைய குருசிலாகிய நெடுமான் அஞ்சி தன் தரத்தை அறியாதவன் போலும், என் தரத்தையும் அறியான் போலும் இவன் அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகன் என்றும் அழைக்கப்படுகிறான். கொங்குநாட்டில் தருமபுரி எனப்படும் தகடூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்தான். தன்னைத் தேடிவந்த புலவர் ஔவையாருக்கு உடனே பரிசில் தந்தால், அவர் உடனே
சென்றுவிடுவார் என்றெண்ணி, பரில் கொடுக்கத் தாமதித்தான். இதனைத் தவறாகப் புரிந்துகொண்ட ஔவையார் சினந்து இவ்வாறு பாடுகிறார். பின்னர் இருவரும் நெருங்கிய நண்பராயினர்.

முரண் மிகு கோவலூர் நூறி – புறம் 99/13

மாறுபாடு மிக்க கோவலூரை அழித்து வென்று

அரவக் கடல் தானை அதிகனும் – சிறு 103

அதியமான் பரிசில் பெறூஉம் காலம் – புறம் 101/5

மதி ஏர் வெண்குடை அதியர் கோமான் – புறம் 392/1

அள்ளனைப் பணித்த அதியன் – அகம் 325/8

இந்த அதியமான் பெயர் தாங்கிய ஒரு பிராமிக் கல்வெட்டு ஜம்பை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜம்பை விழுப்புரம் மாவட்டத்தில், தென் பெண்ணை ஆற்றங் கரையில், திருக்கோயிலூர் நகரத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். 

இவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிலேயே இக் கல்வெட்டு அமைந்துள்ளது. குகையின் உட்பகுதியில் அமைந்துள்ளமையால் மழை, வெயில், காற்று போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படாமல் இன்னும் தெளிவாகவே உள்ளது.
கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ள இக் கல்வெட்டு தமிழ்நாட்டு வரலாற்றைப் பொருத்தவரை மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு கல்வெட்டாகக் கருதப்படுகின்றது. 

1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல்துறை ஆய்வு மாணவர் ஒருவரால் இக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கண்டுபிடிப்பு அண்மைக்காலக் கல்வெட்டுக் கண்டு பிடிப்புக்களுள் முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தும் பல அறிஞர்கள் இதன் நம்பகத் தன்மை குறித்து ஐயுறவு கொண்டிருந்தனர்

தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/3,4

வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியும், வள்ளல் ஓரியும் மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகின்றனர்

அந்தரத்து
அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே – புறம் 392/19-21

கடற்கு அப்புறத்தாயுள்ள நாட்டிலுள்ள
பெறற்கரிய அமுதம்போன்ற
கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய பெரிய வழித்தோன்றலே
(அதியமான் மகன் பொகுட்டெழினியை ஔவையார் பாடியது)

நெடுமிடல் சாய கொடு மிடல் துமிய – பதி 32/10

தான் செய்த கொடிய போர்த்தொழில் பயன்படாது கெடவே, நெடுமிடல் அஞ்சி என்பான் இறந்தானாக
இவன் அதியமான் நெடுமான் அஞ்சியின் குலத்தவன். இவனது நாடு மிக்க வளம் சிறந்ததாகும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *