Skip to content

இடம்

சொல் பொருள்

இடம் – அறுவகைப் பொருளில் ஒன்றான இடம்;

சொல் பொருள் விளக்கம்

இடம் – அறுவகைப் பொருளில் ஒன்றான இடம்;

தரவு – ஒரு கூட்டத்தில் ஒருவன் இருக்குமிடம்;

இருக்கை – இருக்கும் ஆசனம்;

வைப்பு – வைத்திருக்கும் நிலம்;

வரைப்பு – எல்லையோடு சேர்ந்த இடம்;

நிலை நிற்குமிடம்;

நிலையம் நிற்கும் பெரிய இடம்;

நிலைக் களம் – ஆதாரமான இடம்.

வயின் குறிப்பிட்ட சிற்றிடம்;

அகம் – உள்ளிடம்;

புறம் – வெளியிடம்;

இடை – பல பொருளுக்கு இடையிலுள்ள இடம்;

நடு – பல பொருளுக்குச் சரி நடுவிலுள்ள இடம்;

அகடு – ஒரே பொருளின் உள் நடுவிடம்;

தலை – மேலிடம் ; கண் – மேற்பரப்பிடம்;

சூழல் – சூழ்ந்திருக்குமிடம்;

புடை – சூழலில் ஒரு திசைப்பகுதி;

மருங்கு – ஒட்டியுள்ள ஒருபுறம்;

ஞாலம் – பூமியாகிய கோள்;

உலகம் – ஞாலத்திலுள்ள உயிர்த்தொகுதி;

நிலம் – தரை;

மண் – நிலப்புழுதி;

மாநிலம் – முழுத்தரை;

நானிலம் – நால்வகை நிலத் தொகுதி; வையம் அல்லது வையகம் படைக்கப்பட்ட உலகு. (சொல். கட். 48)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *