சொல் பொருள்
ஈடு என்பதன் பொருளை ஈடு இணை என்பதில் காண்க.
எடுப்பு என்பது உயர்வு என்னும் பொருளதாம். எதில் உயர்வு என்பார்க்கு, ஈடு ஆகிய உயர்வினும் உயர்வு என்னும் பொருள் தருவது எடுப்பு என்க.
சொல் பொருள் விளக்கம்
எடுத்த கழுத்து, எடுப்புத் தண்ணீர், எடுப்பாகப் பேசுதல் என்பவற்றில் உயர்வுப் பொருள் உண்மை அறிக. முதல் தண்ணீர் பாய்ச்சப் பெற்ற நடுகைப் பயிர்க்கு மீண்டும் தண்ணீர் விடுதல் எடுப்புத் தண்ணீர் எனப்படும். அத்தண்ணீர் அப்பயிரின் வாட்டம் போக்கி நிமிர்ந்து நிற்க வைத்தற்குரியதாம் என்பதால்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்