எலி என்பது இல்எலி, கருப்பைஎலி , வெள்ளெலி
1. சொல் பொருள்
(பெ) இல்எலி, கருப்பைஎலி , வெள்ளெலி
2. சொல் பொருள் விளக்கம்
இல் எலி, கருப்பைஎலி , வெள்ளெலி என்ற மூன்று எலிகள் கூறப்பட்டுள்ளன . இல்லெலி என்றே சங்க நூல்களில் வழங்கி வந்த எலி வீட்டில் வாழ்ந்த எலி என்பதில் ஐயமில்லை . இது வீடுகளில் எளிதாகக் காணக் கூடியது .
திங்கள் கல்சேர்பு கனையிருண் மடியின்
இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும் “
-அகம் , 122 ..
” வல்சி யின்மையின் வயின் வயின் மாறி
இல்லெலி மடிந்த தொல்சுவர் வரைப்பிற் “
–புறம் , 211 :
” நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகி
–குறுந்தொகை , 107 .
இல்லெலியைக் கூகை வேட்டையாடியதையும் காட்டுப் பூனை தேடியதையும் கூறியுள்ளதைக் காணலாம் . வீட்டில் வறுமை காரணமாக உணவின்றி எலிகள் , கூட்டமாக மடிந்ததாகக் கூறியுள்ளதைப் பார்க்கலாம் . வீட்டில் இடம் விட்டு இடம் மாறி மடிந்ததாகக் கூறப்பட்டுள்ளது .
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
The common House rat, Rattus Rattus
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
எலிவான் சூட்டொடு மலிய பேணுதும் – நற் 83/6
நள்ளிருள் யாமத்து இல்எலி பார்க்கும் – குறு 107/3
இல்எலி வல்சி வல் வாய் கூகை – அகம் 122/13
எலிமுயன்று அனையர் ஆகி உள்ள தம் – புறம் 190/3
இல்எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் – புறம் 211/19
எலிபார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை – புறம் 237/17
குடந்தை அம் செவிய கோட்டுஎலி ஆட்ட – புறம் 321/5
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது