சொல் பொருள்
(பெ) சங்ககாலச் சிற்றரசன், வள்ளல்,
சொல் பொருள் விளக்கம்
(பெ) சங்ககாலச் சிற்றரசன், வள்ளல்,
எழினியாதன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். வாட்டாற்று எழினியாதன் எனப் போற்றப்படுகிறான்.
வேளிர் குடியைச் சேர்ந்தவன். கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் வாட்டாறு என்னும் ஆற்றங்கரையில் இருந்த வாட்டாறு
என்னும் ஊரில் வாழ்ந்தவன் என விக்கிப்பீடியா கூறுகிறது.
இவன் பெயர் ஆதன் என்றும், இவன் தந்தை பெயர் எழினி என்றும் ஔவை.சு.து.அவர்கள் தம் உரையில் குறிப்பிடுகிறார்.
இந்த எழினி தலையாலங்கானதுப்போரில் நெடுஞ்செழியனுக்குத் தோற்றோடியவர்களுள் ஒருவன் என்பார் அவர். ஆனால்
எழினியாதன் நெடுஞ்செழியனோடு நட்புக்கொண்டு வாட்டாற்றில் அர்சுகட்டில் ஏறினான் என்பார் ஔவை.சு.து. இந்த
நெடுஞ்செழியனைப்பற்றி மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி கிழார்மருதனார் இந்த எழினியாதனைப் பற்றியும் பாடியுள்ளார்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chieftain, philanthropist of sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வள நீர் வாட்டாற்று எழினியாதன் கிணையேம் பெரும – புறம் 396/13,14 நீர் வளம் சிறந்த வாட்டாறு என்னும் ஊர்க்குத் தலைவனான எழினியாதனுடைய கிணைப்பொருநர் ஆவோம் பெருமானே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்