கடுவன் என்பதன் பொருள்ஆண்குரங்கு,ஆண்பூனை
1. சொல் பொருள் விளக்கம்
(பெ) பூனை, குரங்கு இவற்றின் ஆண், படைநோய், மாவிலங்கைமரம், கூனன். பார்க்க மான்று.
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
male of a cat or monkey
3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 237 நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும், நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் - மலை 237 வாரற்க தில்ல தோழி கடுவன்/முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சி - நற் 151/5,6 கல்லா கடுவன் நடுங்க முள் எயிற்று - நற் 233/1 கொடியர் வாழி தோழி கடுவன்/ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து - குறு 278/4,5 மந்தி கணவன் கல்லா கடுவன்/ஒண் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன் - ஐங் 274/1,2 குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன்/சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை - ஐங் 275/1,2 மந்தி காதலன் முறி மேய் கடுவன்/தண் கமழ் நறை கொடி கொண்டு வியல் அறை - ஐங் 276/1,2 கல்லா கடுவன் கணம் மலி சுற்றத்து - கலி 40/15 அறியாது உண்ட கடுவன் அயலது - அகம் 2/5 பல் கிளை தலைவன் கல்லா கடுவன்/பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் - அகம் 352/2,3 முள் புற முது கனி பெற்ற கடுவன்/துய் தலை மந்தியை கையிடூஉ பயிரும் - புறம் 158/23,24 கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்/செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி - புறம் 200/2,3 வாழை முது காய் கடுவன் புதைத்து அயரும் - ஐந்70:11/2 பலவின் பழம் பெற்ற பைம் கண் கடுவன் எல என்று இணை பயிரும் ஏகல் சூழ் வெற்பன் - திணை50:10/1,2 கல் வரை ஏறி கடுவன் கனி வாழை - கைந்:7/1 கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் - மணி 19/74
4. பயன்பாடு
கடுவன் பூனை
கடுவன் புலி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்