Skip to content
காஞ்சி

காஞ்சி என்பது ஒரு வகை மரம்

1. சொல் பொருள்

(பெ) 1. ஒரு மரம், ஆற்றுப்பூவரசு, ஆத்து அரசு, ஆற்று பூவரசு, ஆற்றரசு, செம்மருது?, சன்னத்துவரை  2. நிலையாமை, 3. மகளிர் இடையில் அணியும் ஏழுகோவையுள்ள அணி, 4.செவ்வழிப் பண் வகை, 5. புறத்திணை வகைகளில் ஒன்று,

2. சொல் பொருள் விளக்கம்

காஞ்சி-மரம் மிகுதியாக இருந்த ஊர் காஞ்சிபுரம். குறைந்த உயரத்திலேயே கிளைகள் விடும். ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் மரங்களாகய்க் இம்மரங்கள் இருந்தன. காஞ்சிப் பூக்கள் அதன் நனை பருவத்தில் மீன் போலத் தோற்றமளிக்கும்.

மணல் மலிந்த ஆற்றுத் துறைகளில் மருதும் காஞ்சியும் நெருங்கி வளரும். பூக்கள் மரத்தில் இருக்கும்போதே அதன் தாதுகள் கொட்டும். காஞ்சிப்பூவின் மணத்தை வதுவை நாற்றம் என்றனர்.

மயில் மணிச்சிரல் என்னும் மீன்கொத்தி குயில் முதலான பறவைகள் இம்மரத்தில் இருப்பிடம் கொள்வதை விரும்பும்.

காஞ்சி
காஞ்சி

மொழிபெயர்ப்புகள்

many-fruited trewia • Gujarati: પેટાર petaar • Konkani: ¿ बोंवरो ? bomvaro • Malayalam: പമ്പരക്കുമ്പിള്‍ pamparakkumpil, തവള tavala • Marathi: पेटारी petari • Tamil: காஞ்சி kanchi

3. ஆங்கிலம்

Trewia nudiflora, River portia, Instability, transiency, Woman’s waist-girdle consisting of seven strings of beads or bells, An ancient secondary melody-type of the cevvaḻi class, one of the themes in puRam.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

குறும் கால் காஞ்சி கோதை மெல் இணர் – அகம் 341/9

குட்டையான அடிமரத்தையுடைய காஞ்சி மரத்தின் மாலை போன்ற மெல்லிய பூஞ்கொத்துக்கள்

காஞ்சி சான்ற செரு பல செய்து – பதி 84/19

நிலையாமை உணர்வே நிறைந்த போர்கள் பலவற்றைச் செய்து

மேகலை காஞ்சி வாகுவலயம் – பரி 7/47

மேகலைகள், இடையணிகள் ஆகியவற்றையும், ஆண்களின் தோள்வளையங்கள் ஆகிய

இசை மணி எறிந்து காஞ்சி பாடி – புறம் 281/5

ஓசையைச் செய்யும் மணியை இயக்கி, காஞ்சிப்பண்ணைப் பாடி

மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 65/3,4

எதிர்த்துப் போரிட்ட பகைவரின் வீரம் அழியும்படி வென்ற,
காஞ்சித்திணைக்கு அமைந்த வீரர்களுக்குத் தலைவனே!
காஞ்சி
காஞ்சி
துன்னுதல் கடிந்த தொடாஅ காஞ்சியும் - பொருள். புறத்:24/11

முட காஞ்சி செம் மருதின் - பொரு 189

குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி - சிறு 179
குறைந்த உயரத்திலேயே கிளைகள் விடும்

குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடி - பெரும் 375
பசுமையான இலைகளை உடைய குருகு என்னும் கொடி குறுங்கால் காஞ்சி மரத்தில் ஏறிப் படர்ந்து பூத்துக் கிடக்கும்

காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் - குறி 84

புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின் - மலை 449
ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் மரங்களாகய்க் காஞ்சி மரங்கள் இருந்தன.

காஞ்சி ஊரன் கொடுமை - குறு 10/4

கழனி அம் படப்பை காஞ்சி ஊர - குறு 127/3

நனைய காஞ்சி சினைய சிறு மீன் - ஐங் 1/4
காஞ்சிப் பூக்கள் அதன் நனை பருவத்தில் மீன் போலத் தோற்றமளிக்கும்

காஞ்சி அம் பெரும் துறை மணலினும் பலவே - பதி 48/18
மணல் மலிந்த ற்றுத் துறைகளில் மருதும் காஞ்சியும் நெருங்கி வளரும்

களன் அறு குப்பை காஞ்சி சேர்த்தி - பதி 62/15
காஞ்சி இலைகளை ஆயர் தம் ஆடுமாடுகளுக்குத் தீனியாக அறுத்துப் போடுவர்

காஞ்சி சான்ற வயவர் பெரும - பதி 65/4

காஞ்சி சான்ற செரு பல செய்து நின் - பதி 84/19

காஞ்சி சான்ற வயவர் பெரும - பதி 90/39

மேகலை காஞ்சி வாகுவலயம் - பரி 7/47

விரி காஞ்சி தாது ஆடி இரும் குயில் விளிப்பவும் - கலி 34/8

கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர - கலி 74/5
காஞ்சி தழைக்காக வெட்டப்படும்

காஞ்சி தாது உக்கு அன்ன தாது எரு மன்றத்து - கலி 108/60
காஞ்சி மரத்தடியில் அதன் உதிர்-பூ எருவின் மேல் மகளிர் குரவை ஆடுவர்

காஞ்சி கீழ் செய்தேம் குறி - கலி 108/63

தண் கயம் நண்ணிய பொழில்-தொறும் காஞ்சி/பைம் தாது அணிந்த போது மலி எக்கர் - அகம் 25/3,4
காஞ்சிப்பூவின் மணத்தை வதுவை நாற்றம் என்றனர்

காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப - அகம் 56/6
பூக்கள் மரத்தில் இருக்கும்போதே அதன் தாதுகள் கொட்டும்

கழனி அம் படப்பை காஞ்சி ஊர - அகம் 96/8

தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு - அகம் 246/6

காஞ்சி நீழல் தமர் வளம் பாடி - அகம் 286/4
மகளிர் வள்ளைப் பாட்டில் ஊர்வளம் பாடி காஞ்சி நிழலில் நெல் குற்றுவர்

கோதை இணர குறும் கால் காஞ்சி/போது அவிழ் நறும் தாது அணிந்த கூந்தல் - அகம் 296/1,2

காஞ்சி நீழல் குரவை அயரும் - அகம் 336/9

குறும் கால் காஞ்சி கோதை மெல் இணர் - அகம் 341/9

காஞ்சி அம் குறும் தறி குத்தி தீம் சுவை - அகம் 346/6
அமரும் இருக்கைகள் காஞ்சித் தழையில் செய்யப்படுவது உண்டு

நீர் தாழ்ந்த குறும் காஞ்சி/பூ கதூஉம் இன வாளை - புறம் 18/7,8

இசை மணி எறிந்து காஞ்சி பாடி - புறம் 281/5

வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும் - புறம் 296/1

காஞ்சி பனி முறி ஆரம் கண்ணி - புறம் 344/8
காஞ்சித் தளிர்களை ஆரமாகக் கட்டி அணிந்துகொள்வர்

காமரு காஞ்சி துஞ்சும் - புறம் 351/11

காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும் - அகம் 156/6

மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்/ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும் - கலி  26/3,4
காஞ்சிமரம் காமன் போல் அழகு மிக்கது

நிலமகள் அழுத காஞ்சியும்/உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே - புறம் 365/10,11

மணல் மலி பெரும் துறை ததைந்த காஞ்சியொடு/முருக்கு தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை - பதி 23/19,20

கடையாயார் நட்பே போல் காஞ்சி நல் ஊர - திணை50:33/1

மருதோடு காஞ்சி அமர்ந்து உயர்ந்த நீழல் - திணை150:139/1

கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன் - கைந்:46/1

சன்னத்துவரை
சன்னத்துவரை
வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி
பாணி கைக்கொண்டு முற்பகல் பொழுதின் - மது: 22/77,78

காஞ்சி தானையொடு காவலன் மலைப்ப - வஞ்சி:26/191

பூம் காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் - வஞ்சி:29/178

கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய காஞ்சியும்
முது குடி பிறந்த முதிரா செல்வியை - வஞ்சி: 25/132,133

மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்
தென் திசை என்-தன் வஞ்சியொடு வட திசை - வஞ்சி: 25/134,135

நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும்
நிலவு கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி - வஞ்சி: 25/136,137

ஒருதனி ஓங்கிய திரு மணி காஞ்சி
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய - மணி: 18/56,57

பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய - மணி:21/148

செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை - மணி:21/154

பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து - மணி:28/156

புன் காஞ்சி தாது தன் புறம் புதைய கிளி என கண்டு - சிந்தா:3 648/1

தண் காஞ்சி தாது ஆடி தன் நிறம் கரந்ததனை - சிந்தா:3 649/1

குறும் தாள் குயில் சேவல் கொழும் காஞ்சி தாது ஆடி - சிந்தா:3 650/1
ஆற்று பூவரசு
ஆற்று பூவரசு
துயல்வரு கனக நாணும் காஞ்சியும் துகிலும் வாங்கி - யுத்3:25 16/3
பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள் - தேவா-சம்:2718/2
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே - தேவா-சம்:4026/4
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே - தேவா-சம்:4027/4
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே - தேவா-சம்:4029/4
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே - தேவா-சம்:4030/4
மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த - தேவா-அப்:116/1
கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் - தேவா-அப்:424/3
காலனை காலால் காய்ந்தார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் - தேவா-அப்:425/3
கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் - தேவா-அப்:426/3
காமனை காய்ந்த கண்ணார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் - தேவா-அப்:427/3
கானவர் காள_கண்டர் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் - தேவா-அப்:428/3
காயமாய் காயத்து உள்ளார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் - தேவா-அப்:429/3
கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் - தேவா-அப்:430/3
கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் - தேவா-அப்:431/3
பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே - தேவா-அப்:959/4
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் - தேவா-அப்:2208/3
கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண - தேவா-அப்:3003/2
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய் - தேவா-சுந்:218/1

கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று - 1.திருமலை:1 34/3
நீள் இலை வஞ்சி காஞ்சி நிறை மலர் கோங்கம் எங்கும் - 1.திருமலை:2 28/4
மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அரவு உலகை வென்ற - 1.திருமலை:5 138/2
வெறி மலர் தண் சினை காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் - 4.மும்மை:4 9/3
கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம் - 4.மும்மை:5 48/4
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள் - 4.மும்மை:5 53/2
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீ_வினையும் - 4.மும்மை:5 70/3
தன் நிழல் பிரியாத வண் காஞ்சி தானம் மேவிய மேன்மையும் உடைத்து-ஆல் - 4.மும்மை:5 75/4
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் - 4.மும்மை:5 83/4
தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து - 4.மும்மை:5 86/1
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும் - 4.மும்மை:5 86/2
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ - 4.மும்மை:5 86/3
வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும் - 4.மும்மை:5 86/4
நல் கனக மழை அன்றி காஞ்சி எல்லை நவ மணி மாரியும் பொழியும் நாளும்நாளும் - 4.மும்மை:5 94/4
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி - 4.மும்மை:5 102/1
தேர் ஒலிக்க மா ஒலிக்க திசை ஒலிக்கும் புகழ் காஞ்சி
   ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார் - 4.மும்மை:5 113/1,2
நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி - 4.மும்மை:6 7/4
ஆற்றரசு
ஆற்றரசு
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணி காஞ்சி
   ஓங்குவன மாடம் நிரை ஒழுகுவன வழு_இல் அறம் - 5.திருநின்ற:1 13/2,3
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் - 5.திருநின்ற:1 317/4
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் - 5.திருநின்ற:1 318/3
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணி நீள் காஞ்சி அலங்கரித்தார் - 5.திருநின்ற:1 319/4
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி - 5.திருநின்ற:1 321/2
மல்கு புகழ் காஞ்சி ஏகாம்பரம் என்னும் - 6.வம்பறா:1 945/2
மாது_ஓர்_பாகர்-தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் - 6.வம்பறா:1 985/4
நீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும் - 6.வம்பறா:1 986/1
காதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய் - 6.வம்பறா:1 988/3
நீடு திரு பொழில் காஞ்சி நெறிக்காரைக்காடு இறைஞ்சி - 6.வம்பறா:1 1000/1
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகி - 6.வம்பறா:1 1105/3
அந்தி செக்கர் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் - 6.வம்பறா:2 183/4
இன்று இங்கு எய்தப்பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார் - 6.வம்பறா:2 184/4
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லை காஞ்சி நகர் - 6.வம்பறா:2 189/3
சீரார் காஞ்சி மன்னும் திரு காமகோட்டம் சென்று இறைஞ்சி - 6.வம்பறா:2 190/1
கன்னி மதில் மணி மாட காஞ்சி மா நகர் அணைந்தார் - 6.வம்பறா:2 283/4
தே மலர் வார் பொழில் காஞ்சி திரு நகரம் கடந்து அகல்வார் - 6.வம்பறா:2 290/3
மாடு உயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் - 6.வம்பறா:3 5/4
அ நாளில் எயில் காஞ்சி அணி நகரம் சென்று அடைந்து - 7.வார்கொண்ட:1 3/1
உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏற - 8.பொய்:2 19/3
கன்னி மதில் சூழ் காஞ்சி காடவரை அடிகளார் - 8.பொய்:8 7/4
துன்னு பல் உயிர் வானவர் முதலா சூழ்ந்து உடன் செல காஞ்சியில் அணைய - 4.மும்மை:5 55/1
அந்தம்இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ - 4.மும்மை:5 87/3
அழகு சிறக்க காஞ்சி மேவிய பெருமாளே - திருப்:340/16
காஞ்சி பதி மா நகர் மேவிய பெருமாளே - திருப்:351/16
கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் உறை பேதை - திருப்:365/10
அ நகர நாளாங்கிதர் தமை உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ காஞ்சியில் உறைவோனே - திருப்:338/6
காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கலவி மடவீர் கழல் சென்னி - கலிங்:63/1
காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கள போர் பாட திற-மினோ - கலிங்:63/2
கார் எலாம் எழுந்து ஏழரை நாழிகை காஞ்சனம் பொழி காஞ்சி அதன்-கணே - கலிங்:314/2
ந காஞ்சிக்கும் வடமலைக்கும் நடுவில் வெளிக்கே வேடனை விட்டு - கலிங்:73/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *