Skip to content

சொல் பொருள்

(பெ) 1. உள்ளே குடையப்பட்டது. 2. சிலம்பு

சொல் பொருள் விளக்கம்

உள்ளே குடையப்பட்டது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

The state of being hollow, anklet

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச்சூல்
 அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து – அகம் 198/9,10

வில்லைப்போல் வகையமைந்தநன்மை பொருந்திய வளைந்த உள்ளே குடைந்து வெற்றிடமாயுள்ள அழகிய சிலம்பினை ஒலியாது ஒடுக்கி அச்சத்துடன் வந்து

செ விரல் சிவந்த அம் வரி குடைச்சூல்
அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும் – பதி 68/18,19

சிவந்த விரல்கள் மேலும் சிவந்து போன அழகிய வரிகளையும், சிலம்பையும் காண்பாரை வருத்தும் அழகையும் உடைய மகளிரின் மனத்தைத் தன்வயப்படுத்தும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *