சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககாலச் சிற்றரசன், வள்ளல்,
சொல் பொருள் விளக்கம்
குமணன் சங்ககால மன்னன். முதிரமலைப் பகுதியை ஆண்டவன். இவன் ஒரு சிறந்த வள்ளல்.
பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன்
கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவன்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chieftain of sangam period, a philanthropist
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நட்டோர் நட்ட நல் இசை குமணன் மட்டு ஆர் மறுகின் முதிரத்தோனே – புறம் 160/12,13 தன்னுடைய நண்பரினும் எம்மோடு நட்புச்செய்த நல்ல புகழையுடைய குமணன் மது நிறைந்த தெருவினையுடைய முதிரம் என்னும் மலையிடத்தான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்