Skip to content
குருக்கத்தி

குருக்கத்தி என்பது ஒரு மலர்க்கொடி

1. சொல் பொருள்

(பெ) மாதவிக்கொடி,

2. சொல் பொருள் விளக்கம்

மாதவி, குருகு, கத்திகை, வசந்தமல்லி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Common delight of the woods, Hiptage madablota, gaertnera racemosa

குருக்கத்திப்பூ
குருக்கத்திப்பூ

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு – நற் 97/6

பஞ்சுப்பிசிரினை உச்சியில் கொண்ட இதழ்களைக் கொண்ட பைங்குருக்கத்தி மலருடன்

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ – நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடிவள ராதோ? – நன்னெஞ்சே” -பாரதியார் பாடல்.
குருக்கத்திஇலை
குருக்கத்திஇலை
பாரம் பீரம் பைம் குருக்கத்தி/ஆரம் காழ்வை கடி இரும் புன்னை - குறி 92,93

குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி - பரி 12/79

துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு/பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என - நற் 97/6,7
குருக்கத்தி
குருக்கத்திப்பழம்
கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை - தேவா-சுந்:101/3

குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல் - தேவா-சம்:1864/1

முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா - தேவா-சுந்:425/3

புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி பொதும்பினில் வாழும் குயிலே - நாலாயி:545/3

குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் - நாலாயி:188/4
குருக்கத்தி
குருக்கத்திக்கொடி
கொடி குருக்கத்தி கோல செம் தளிர் - மகத:6/24

கொடி குருக்கத்தி கொழும் தளிர் பிடித்து - மகத:7/78

அணி குருக்கத்தியும் அதிரலும் அனுக்கி - உஞ்ஞை:51/39

கோங்கமும் குரவும் கொடி குருக்கத்தியும்
நறையும் நந்தியும் அறை பயில் அகிலும் - இலாவாண:12/14,15

மணி குருக்கத்தியும் மணி பூம் சுள்ளியும் - இலாவாண:15/105

மா குருக்கத்தியொடு மல்லிகை மணந்த - உஞ்ஞை:44/14

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “குருக்கத்தி”

  1. பாரதி பாடலில் குருக்கத்திப் பூவை பற்றி படித்தவர்கள் தேடியதில் உங்கள் வலைத்தளம் கிடைத்தது நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *