Skip to content
மலை மல்லிகை

குளவி என்பது மலை மல்லிகை, ஒரு பூச்சியினம்

1. சொல் பொருள்

(பெ) மலை மல்லிகை, மரமல்லிகை; ஒரு பூச்சியினம்.

2. சொல் பொருள் விளக்கம்

மலை மல்லிகை,

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

mountain jasmine, Millingtonia hortensis, Jasminum griffithii, clarke, Indian cork tree?

EnglishMillingtonia مصرى: ميلينجتونيا هورتنسيس বাংলা: হিমঝুরি Deutsch: Jasminbaum español: Millingtonia فارسی: یاس درختی français: Millingtonia ગુજરાતી: બૂચ ភាសាខ្មែរ: អង្គាបុស្ប ಕನ್ನಡ: ಆಕಾಶಮಲ್ಲಿಗೆ മലയാളം: കോർക്കുമരം मराठी: आकाशनिंब မြန်မာဘာသာ: ဧကရာဇ်ပင် português: Millingtonia संस्कृतम्: अम्बरमल्लिका தமிழ்: மரமல்லிகை తెలుగు: ఆకాశమల్లి ไทย: ปีบ Tiếng Việt: Đạt phước 中文: 老鸦烟筒花 中文(简体): 老鸦烟筒花 中文(繁體): 老鴉煙筒花 中文(香港): 老鴉煙筒花

குளவி
குளவி

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பெரும் தண் கொல்லி சிறு பசும் குளவி
கடி பதம் கமழும் கூந்தல் – நற் 346/9,10

மிகவும் குளிர்ச்சியுடைய கொல்லிமலையிலுள்ள சிறிய பசிய மலைமல்லிகையின்
மிகுதியான மணம் கமழும் கூந்தலையுடைய

குளவி
குளவி

குளவி பள்ளி பாயல்கொள்ளும் – சிறு 46

கரந்தை குளவி கடி கமழ் கலி மா – குறி 76

பெரும் தண் குளவி குழைத்த பா அடி – நற் 51/8

குளவி தண் கயம் குழைய தீண்டி – நற் 232/2

பெரும் தண் கொல்லி சிறு பசும் குளவி/கடி பதம் கமழும் கூந்தல் – நற் 346/9,10

குல்லை குளவி கூதளம் குவளை – நற் 376/5

குளவி மொய்த்த அழுகல் சில் நீர் – குறு 56/2

குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் – குறு 59/3

குளவி மேய்ந்த மந்தி துணையோடு – ஐங் 279/2

காண்டல் விருப்பொடு கமழும் குளவி/வாடா பைம் மயிர் இளைய ஆடு நடை – பதி 12/10,11

குளவி தண் புதல் குருதியொடு துயல் வர – அகம் 182/7

கூதளம் கவினிய குளவி முன்றில் – புறம் 168/12

கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை – பதி 30/23

வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய – மலை 334

மலை மல்லிகை
மலை மல்லிகை

பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு/கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும் – நற் 119/8,9

பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும் – குறு 100/2

உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் – அகம் 268/4

குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி – அகம் 272/8

அடை மல்கு குளவியொடு கமழும் சாரல் – புறம் 90/2

நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய – புறம் 380/7

அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – திரு 191,192

இலை அடர் தண் குளவி வேய்ந்த பொதும்பில் – ஐந்70:3/1

மலை மல்லிகை
மலை மல்லிகை

வேயும் வெதிரமும் வெட்சியும் குளவியும்
ஆய் பூம் தில்லையும் அணி மாரோடமும் – உஞ்ஞை:50/30,31

குளவியும் குறிஞ்சியும் வளவிய மௌவலும் – இலாவாண:12/28

புனிற்று இளம் குளவியை தீவகம் பொருந்தி – மணி:29/5

திங்கள் அம் குளவி செ வான்-இடை கிடந்து இமைப்பதே போல் – சிந்தா:6 1501/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *