சொல் பொருள்
குழிவு – பக்கங்கள் உயர்ந்து நடுவே குழி வானது குழிவு ஆகும்.
குவிவு – நடுவுயர்ந்து பக்கங்கள் குழிவானது குவிவு ஆகும்.
சொல் பொருள் விளக்கம்
முன்னதற்குக் குழியையும் பின்னதற்குக் குவியலையும் கண்டு அறிக. கிட்டப்பார்வை எட்டப்பார்வைகளுக்குக் குழிவு ஆடி, குவிவு ஆடிகளைப் பயன்படுத்துதல் நடைமுறைச் செய்தியாம்.
குழியைக் ‘குண்டு குழி’ என்பதிலும், குவிவை மலர் குவிதலிலும் கண்டுகொள்ளலாம். தாமரை குவிதல் போல் கைகுவிதலையும் (கூப்புதலையும்) ஒப்பிட்டுக் ‘கைம்மலர்’ என்பதன் அருமையை உணரலாம்!
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்