Skip to content
சண்பகம்

சண்பகம் என்பது என்றும் பசுமையான பெரிய தாவரம் ஒன்றாகும்.

1. சொல் பொருள்

(பெ) ஒரு மரம், பூ

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு மரம், பூ. மிகுந்த நறுமணம் கொண்ட மஞ்சள் அல்லது வெண்ணிறப் பூக்களுக்காக இது வெகுவாக அறியப்படுகிறது. சண்பகப் பூக்கள் வீடுகளில் அல்லது ஆலயங்களில் வழிபாடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

சண்பகம்
சண்பகம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Champak, Michelia champaca,

Michelia champaca, Linn, (Magnoliaceae), Michelia nilagirica
Magnolia grandiflora, Linn, Magnolia globosa

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் – கலி 150/20-22

பெறுவதற்கு அருமையான திருவாதிரைப் பெயரையுடைய சிவபெருமான் அணிந்துகொள்வதற்காக மலர்ந்த
பெரிய குளிர்ந்த சண்பக மலர் பருவம் பொய்க்காமல் மலர்வதைப் போன்று, நாமிருவரும் ஒன்றாக, அவர்
சொன்னசொல் தவறாமல் திரும்பி வருவார் என்பதனை உணர்ந்துள்ளோம்,

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு - திரு 27

வண்டு அறைஇய சண்பக நிரை தண் பதம் - பரி 11/18

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு - திரு 27

செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம்/கரந்தை குளவி கடி கமழ் கலி மா - குறி 75,76

மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம்/அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் - பரி  12/77,78

பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் - கலி 150/21
சண்பகம்
சண்பகப் பூக்கள்
சால் அரும்பு சூல் அணிந்த சண்பக தண் சினைகள்-தொறும் தவறும் தென்றல் - தேம்பா:8 6/1

மை திறத்தால் விரி சிறகை ஓசனித்த வண்டு அணுகா சண்பக அம் தொடையை அன்றே - தேம்பா:8 56/3

சண்பக பூம் பந்து ஒத்த தனையனை ஏந்தி போய் தம் - தேம்பா:12 14/1

சண்பக நிழலின் வைகி தரணி ஆள் இளவல் நல் யாழ் - தேம்பா:30 61/3

நனை வரும் சண்பக நறு நிழற்கு இணை - தேம்பா:35 2/1

பகை தீர்ந்து சண்பகத்தின் தண் நிழல் கீழ் பள்ளி வர - தேம்பா:1 61/1

கான் வளர் சண்பகம் மலர்ந்த காவுகள் - தேம்பா:1 38/2

கரை கிடந்த மா வழை மகிள் சண்பகம் கமழ் கா - தேம்பா:29 98/2

சண்பகம் மலர்ந்த சோலை சந்தனம் நிழற்றும் சோலை - தேம்பா:30 126/1

கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை - தேவா-சம்:1369/1

நாறு செங்கழுநீர் மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு
சேறு செய் கழனி பழன திரு பனையூர் - தேவா-சுந்:883/1,2

மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண் பூம் - தேவா-சம்:1880/3

சால மாதவிகளும் சந்தனம் சண்பகம்
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே - தேவா-சம்:3143/3,4

சாலம் மா பீலியும் சண்பகம் உந்தியே - தேவா-சம்:3182/2

குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை - தேவா-சம்:4077/3

குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி - தேவா-அப்:952/2

அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி - தேவா-சுந்:126/1

மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம்
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழ போதுமே - தேவா-சுந்:352/3,4

மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம்
அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே - தேவா-சுந்:362/3,4

மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த - தேவா-சம்:2242/3

தளிர் தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே - தேவா-சுந்:1002/3,4

விரிதரு மல்லிகையும் மலர் சண்பகமும் அளைந்து - தேவா-சுந்:1013/3

மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும் - 1.திருமலை:2 29/3

கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை - 8.பொய்:6 4/2

வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம் - 1.திருமலை:5 94/1
சண்பகப் பூக்கள்
சண்பகப் பூக்கள்
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லை அம் கொடி ஆட - நாலாயி:1150/3

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர - நாலாயி:72/1

பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும் - திருப்:17/7

சண்பக கலாரம் வகுள தாம வம்பு துகில் ஆர வயிர கோவை - திருப்:58/3

கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி - திருப்:455/3

கொத்தும் தரித்து சுந்தரத்தில் பண்பு அழித்து கண் சுழற்றி சண்பக புட்பம் குழல் மேவி - திருப்:461/2

சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல - திருப்:468/2

சலச கெந்தம் புழுகு உடன் சண்பக மணம் கொண்டு ஏய் இரண்டு அம் - திருப்:500/4

தங்கு சண்பக முகில் அளவு உயர் தரு பொழில் மீதே - திருப்:770/14

பூர குங்கும தூள் ஆமோத படீர சண்பக மாலால் லாளித - திருப்:1181/3

வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி - திருப்:576/14

சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும் - திருப்:835/1

முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம்
முடிய நிறைத்து ததும்பி வந்து அடி முன் பினாக - திருப்:1013/1,2

தாதகி சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம் வாசந்தி சந்தன நீடு - திருப்:1104/5

சந்தனம் புனைந்த கொங்கை கண்களும் சிவந்து பொங்க சண்பகம் புனம் குறம் பொன் அணை மார்பா - திருப்:1156/6

மரு மணம் பெறும் சந்து அகில் சண்பக வனத்தில் - சீறா:75/3

கொத்து அரும்பு அலர்த்தி சண்பக தொகுதி குவைதர சொரிவன ஒரு-பால் - சீறா:1003/2

வேங்கை சந்தனம் சண்பகம் நெல்லி வெய் தான்றி - சீறா:26/1

நிரைந்த சண்பகம் பாடலம் தட கரை நிரம்ப - சீறா:65/1

தேன் மலர் சண்பகம் செறிந்த நீழலும் - சீறா:492/1

முல்லை சண்பகம் பாடலம் செ இதழ் முளரி - சீறா:1108/1

எள்ளையும் சிறந்த குமிழையும் வாசத்து இனிய சண்பகமலர்-தனையும்
விள்ள அரும் கானத்திடை அலர்படுத்தி விலங்கிட விலங்கிய குமிழாள் - சீறா:1959/3,4

பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் - வில்லி:7 27/3

தண் பொழில் கவைஇய சண்பக காவில் - உஞ்ஞை:38/278

சந்தன வேலி சண்பகத்து இடையது ஓர் - உஞ்ஞை:33/22

கோதை மாதவி சண்பக பொதும்பர் - புகார்:2/18

தாது சேர் கழுநீர் சண்பக கோதையொடு - மது:13/119

சண்பகம் மாதவி தமாலம் கருமுகை - புகார்:8/45

சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் - புகார்:10/69

சண்பகம் கருவிளை செம் கூதாளம் - மது:22/40

செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி - மணி: 3/165,166

தான் அமர்ந்து உழையின் நீங்கா சண்பக மாலை என்னும் - சிந்தா:1 314/3

சண்பக மாலை வேய்ந்து சந்தனம் பளிதம் தீற்றி - சிந்தா:4 1081/1

பொங்கு பூம் சண்பக போது போர்த்து உராய் - சிந்தா:5 1199/2

சண்பக நறு மலர் மாலை நாறு சாந்து - சிந்தா:6 1441/1

மா சினை மயில்கள் ஆட சண்பக மலர்கள் சிந்தும் - சிந்தா:6 1497/3

மாது ஆர் மயில் அன்னவர் சண்பக சாம்பல் ஒத்தார் - சிந்தா:11 2349/4

வாச தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே - சிந்தா:1 68/4

சண்பகத்து அணி மலர் குடைந்து தாது உக - சிந்தா:1 79/2

சண்பகத்து அணி கோதை நின்றாள் தனி - சிந்தா:5 1324/3

ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம்
நாள்செய் மாலை நகை முடி பெய்பவே - சிந்தா:1 132/3,4

ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும் - சிந்தா:1 149/3

சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை - சிந்தா:3 827/1

பூ அலர் சண்பகம் பொருந்திற்று என்பவே - சிந்தா:4 1013/4

சந்தன காவு சூழ்ந்து சண்பகம் மலர்ந்த சோலை - சிந்தா:5 1253/1

சினைய சண்பகம் வேங்கையோடு ஏற்றுபு - சிந்தா:7 1608/3

ஓடு தேர் கால் மலர்ந்தன வகுளம் உயர் சண்பகம்
கூடு கோழி கொழு முள் அரும்பின அம் கோசிக - சிந்தா:7 1650/2,3

மரவம் நாகம் மணம் கமழ் சண்பகம்
குரவம் கோங்கம் குடம் புரை காய் வழை - சிந்தா:8 1918/1,2

வளைந்த மின் அனார் மகிழ்ந்து சண்பகம்
உளைந்து மல்லிகை ஒலியல் சூடினார் - சிந்தா:13 2682/3,4

தாது உகு சோலை-தோறும் சண்பக காடு-தோறும் - பால:1 20/1

சந்தன வனம் அல சண்பக வனம் ஆம் - பால:2 48/3

மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக
குழை உலாவு சோலை சோலை அல்ல பொன் செய் குன்றமே - கிட்:7 2/3,4

பாங்கர் சண்பக பத்தி பறித்து அயல் - சுந்:6 25/3

தசநவ பெயர் சரள சண்பகத்து
அசந அ புலத்து அகணி நாடு ஒரீஇ - கிட்:15 16/1,2
சண்பகம்
சண்பகம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *