செருந்தி

செருந்தி என்பது புதர்ச் செடி, வாள்கோரைப் புல்.

1. சொல் பொருள்

(பெ) 1. வாள்கோரைப் புல், 2. சிலந்தி,

2. சொல் பொருள் விளக்கம்

நீளமாக வளர்வதால், நெட்டுக்கோரை. வாள் போல் பூ பூப்பதால், வாள்கோரை(வாட்கோரை).

  • செருந்தி பொய்கையில் பொன் போல் கொத்தாகப் பூக்கும், புதர்புதராக வளரும்.
  • சூரியக் கதிர் போல் அரும்பிப் பூக்கும்
  • செருந்தியையும் நெய்தலையும் சேர்த்துக் கட்டி ஆடவர் மார்பில் மாலையாக அணிவர்
  • நெருக்கமான மொட்டுகளைக் கொண்டது
  • வண்டு அருந்தும் தேன் உள்ள மலர்
  • நெய்தல் நிலத்தில் பொன் நிறத்தில் பூக்கும்
  • வயலில் கோரைப்புல் போல வளரும்
  • செருந்திப் பூவின் கால் செந்நிறம் கொண்டது.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a kind of sedge

Panicled golden-blossomed pear tree, Ochna squarrosa, Konok Chapa, Golden Champak, Ochna serrulata, Mickey Mouse bush;

செருந்தி

செருந்திப்பூ

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர – மது 171,172

செங்கழுநீர் மிக்க இடம் அகன்ற பொய்கைகளில்
யானை(யும்) மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகங்கோரையும் நெருங்கி வளர

எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ – ஐங் 141/1

மணல் மேட்டினில் உள்ள ஞாழல் மரத்தின் பூ, செருந்திப்பூவுடன் கமழ்ந்திருக்க,

தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் - சிறு 147

செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம் - குறி 75

கொழும் கால் புதவமொடு செருந்தி நீடி - பட் 243

செருந்தி தாய இரும் கழி சேர்ப்பன் - ஐங் 112/2

நனைத்த செருந்தி போது வாய் அவிழ - அகம் 150/9

விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர் - அகம் 240/13

பொன் அடர்ந்து அன்ன ஒள் இணர் செருந்தி/பன் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள் - அகம் 280/1,2

அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் - புறம் 390/3

பருதி_அம்_செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும்/மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும் - கலி  26/2,3

புரி அவிழ் பூவின கைதையும் செருந்தியும்/வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத - கலி  127/2,3

களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர - மது 172

இரும் சாய் அன்ன செருந்தியொடு வேழம் - ஐங் 18/1

எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ - ஐங் 141/1

நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇ - ஐங் 182/1

நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை செருந்தி
இரும் கழி தாழும் எறி கடல் தண் சேர்ப்ப - பழ:170/2,3
செருந்தி
செருந்தி
செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும் - மணி:3/165

குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும்
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும் - மணி: 19/93,94

செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம் - அயோ:9 8/2
செருந்தி
செருந்திச்செடி
கொங்கு செருந்தி கொன்றை மலர் கூட - தேவா-சம்:255/1

பொன் தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் - தேவா-சம்:768/3

கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் - தேவா-சம்:816/3

சேலின் நேர் விழியார் மயில் ஆல செருந்தி
காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே - தேவா-சம்:1881/3,4

செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம் - தேவா-சம்:3174/3

மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் - தேவா-சம்:3632/3

விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் - தேவா-சம்:4126/3

செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே - தேவா-சுந்:662/4

செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திரு ஆரூர் - தேவா-சுந்:973/1

செருந்தி செம்பொன் மலரும் திரு நாகேச்சரத்து அரனே - தேவா-சுந்:1007/4

ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும் - தேவா-சம்:2957/1

நாளி கேரம் செருந்தி நறு மலர் நரந்தம் எங்கும் - 1.திருமலை:2 28/1

வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம் - 1.திருமலை:5 94/1

சேய நீள் விழி பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேர் அள தளவர்கள் அளப்பன உப்பு - 4.மும்மை:5 34/2,3

கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை - 8.பொய்:6 4/2

புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி பொதும்பினில் வாழும் குயிலே - நாலாயி:545/3

செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலை திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே - நாலாயி:1144/4

செருந்தி நாள்மலர் சென்று அணைந்து உழிதரு திருவயிந்திரபுரமே - நாலாயி:1148/4

புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும் - நாலாயி:1191/3

சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே - 
நாலாயி:1228/3

சேடு ஏறு மலர் செருந்தி செழும் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே - நாலாயி:1241/3

பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி - நாலாயி:1339/3

பொன்னை நைவிக்கும் அ பூம் செருந்தி மண நீழல்வாய் - நாலாயி:1768/2

பூம் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன் - நாலாயி:1785/3

பொன் அலர்ந்த நறும் செருந்தி பொழிலினூடே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே - நாலாயி:2076/4

செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் - நாலாயி:3458/2

குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை - நாலாயி:3903/2

புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று - நாலாயி:351/3

மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை அமர்ந்த பெருமாளே - திருப்:231/8

முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம் - திருப்:1013/1

புன்னையும் செருந்தியும் பொன் இணர் ஞாழலும் - உஞ்ஞை:48/154

அரும்பு அணி புன்னையும் சுரும்பு இமிர் செருந்தியும்
இலை அணி இகணையும் இன்னவை பிறவும் - இலாவாண:9/7,8

சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் - மது:13/153

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.