ஈ வரிசைச் சொற்கள்

ஈ வரிசைச் சொற்கள், ஈ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஈ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஈ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஈற்றா

சொல் பொருள் கடுஞ்சூல் நாகு அன்றிப் பலகால் ஈன்ற ஆவை. (திருக்கோ. 382. பேரா) சொல் பொருள் விளக்கம் ஈற்றா: ஈற்றா என்றது, கடுஞ்சூல் நாகு அன்றிப் பலகால் ஈன்ற ஆவை. (திருக்கோ. 382.… Read More »ஈற்றா

ஈழவர்

சொல் பொருள் மக்கள் பற்பல சமயங்களில் தமிழ் நாட்டினின்று ஈழத்திற்குக் குடியேறியது போன்றே, ஈழத்தினின்றும் தமிழ் நாட்டிற்குக் குடியேறி வந்திருக்கின்றனர். இங்ஙனம் கொண்டு வரப்பட்டவரும் குடியேறியவருமே ஈழவர் எனப்பட்டனர். சொல் பொருள் விளக்கம் மக்கள்… Read More »ஈழவர்

ஈழம்பூட்சி

சொல் பொருள் கள் இறக்குவதற்குச் செலுத்த வேண்டிய வரி சொல் பொருள் விளக்கம் ஈழம்பூட்சி என்பது கள் இறக்குவதற்குச் செலுத்த வேண்டிய வரியாகும். (முதற்குலோத்துங்க சோழன். 88.)

ஈதா

சொல் பொருள் இந்தா சொல் பொருள் விளக்கம் ஈதா என்பது ஒரு மரூஉ முடிபு; அஃது இக்காலத்து ‘இந்தா’ என்று வழங்கப்படும். (பரிபாடல். 6: 60. பரி.)

ஈதல்

சொல் பொருள் அளித்தல், இடுதல், வழங்கல் சொல் பொருள் விளக்கம் (1) அளித்தல் என்பது அன்பினாற் கொடுத்தலையும், இடுதல் என்பத கீழிட்டுக் கொடுத்தலாகிய இரப்போர்க்கீதலையும் ; வழங்கல் என்பது எடுத்துக் கொடுத்தலையும் குறிக்கும். அருள்தல்… Read More »ஈதல்

ஈவுதாவு

சொல் பொருள் ஈவு – கொடை என்னும் பொருள்தருதல்; ஈவிரக்கம் என்பதில் கண்டதே.தாவு – என்பது பணிவு என்னும் பொருளது; தாழ்வு என்பது தாவு ஆயிற்று. வீழ்வு என்பது வீவு ஆவது போல. சொல்… Read More »ஈவுதாவு

ஈவு இரக்கம்

சொல் பொருள் ஈவு – கொடை கொடுத்தல்.இரக்கம் – அருள் புரிதல். சொல் பொருள் விளக்கம் சாதல், ‘சாவு’ என ஆவது போல் ஈதல் ‘ஈவு’ ஆகியது. பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு… Read More »ஈவு இரக்கம்

ஈரம் சாரம்

சொல் பொருள் ஈரம் – ஈரமுள்ள இடம்சாரம் – ஈரமான இடத்தைச் சார்ந்த இடம் சொல் பொருள் விளக்கம் ‘ஈரம் சாரம்’ இருப்பதால் இந்த மரம் வளமாக இருக்கிறது என்பர். என்ன ஊட்டமும் நில… Read More »ஈரம் சாரம்

ஈடுசோடு

சொல் பொருள் ஈடு – உயர்வு என்னும் பொருளதாதலும் அதன் விளக்கமும் ஈடு இணை என்பதில் காண்க.சோடு – சுவடு; சுவடாவது ஒப்பு சொல் பொருள் விளக்கம் சுவடிப் பிள்ளைகள், சுவடிக் காளைகள், சுவடிப்பு… Read More »ஈடுசோடு

ஈடுஎடுப்பு

சொல் பொருள் ஈடு என்பதன் பொருளை ஈடு இணை என்பதில் காண்க.எடுப்பு என்பது உயர்வு என்னும் பொருளதாம். எதில் உயர்வு என்பார்க்கு, ஈடு ஆகிய உயர்வினும் உயர்வு என்னும் பொருள் தருவது எடுப்பு என்க.… Read More »ஈடுஎடுப்பு