Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

முளை

சொல் பொருள் (வி) எழு, தோன்று, உதி (பெ) 1. மூங்கில் போன்ற தாவரங்களின் கணுக்களினின்றும் வெளிப்படும் மென்மையான பகுதி, விதை, கிழங்கு ஆகியவற்றினின்றும் வெளிப்படும் மென்மையான பகுதி முளைத்து வருவன எல்லாம் முளை… Read More »முளை

முதல்

சொல் பொருள் அடிப்பாகம், முதல்வன், தலைவன், தொடக்கம், வேர், கிழங்கு,  முதன்மை, வேர், பழம், விதை, சொத்து, நாற்று சொல் பொருள் விளக்கம் முதன்மை, வேர், பழம், விதை, சொத்து எனப் பொருள் தரும்… Read More »முதல்

கூந்தல்

சொல் பொருள் பெண்கள் தலைமயிர், குதிரை, கேசி என்னும் அசுரன், குதிரையின் பிடரி மயிர் கூந்தல் = மகளிர் முடி கூந்தல் பனை என்பது சடைசடையாகப் பாளை தொங்கும் பனையாகும் நுங்குக் காயைச் சீவித்… Read More »கூந்தல்

நெட்டு

சொல் பொருள் நெடுமை நெடிய கழுத்தை நெட்டை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு தேங்காய் நாரை நெட்டு என்பது தென்காசி வட்டார வழக்கு. நெட்டு என்பது வாழைப்பழத்தோல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்குள்ளது… Read More »நெட்டு

வெள்ளை

1. சொல் பொருள் வெண்மை, வெள்ளாடு, வெள்ளைநிறக்காளை, பலராமன் வெள்ளை – கள் 2. சொல் பொருள் விளக்கம் வெள்ளையடித்தல், வெள்ளை கொண்டு வரல், வெள்ளையான ஆள், வெள்ளைச் சீலை என்பனவெல்லாம் வெளிப்படைப் பொருளே.… Read More »வெள்ளை

வெள்ளென

சொல் பொருள் தெளிவாக, வெளிச்சம் இருக்கும்போதே வெள்ளென – விடிய சொல் பொருள் விளக்கம் வெள் என என்பது வெளிச்சம் உண்டாக என்பதாம். காலையில் கதிரோன் எழுந்ததும் கப்பியிருந்த இருள் அகலுதலால் வெள்ளெனத் தோன்றும்.… Read More »வெள்ளென

வெதிர்

சொல் பொருள் மூங்கில் சொல் பொருள் விளக்கம் வெதிர் – மூங்கில்வெதிர் என்பது மூங்கிலைக் குறிக்கும் இலக்கியச் சொல். “வெதிரின் நெல்” என்னும் புறநானூறு. வெதிர் என்பது துளுநாட்டில் ‘பெதிர்’ என வழங்குதல், வகரம்… Read More »வெதிர்

வேட்டை

சொல் பொருள் வேட்டையாடும் தொழில் வேட்டை – வாய்ப்பு, வாய்ப்பாகக் கிடைத்தல், இன்பு சொல் பொருள் விளக்கம் வேட்டையாடுவது ஆடுபவர்க்கு இன்புப் பொருளாக இருக்கலாம். ஆனால் ஆடப்படும் உயிர்க்குத் தீராத் துன்பாதல் வெளிப்படை. சுட்ட… Read More »வேட்டை

கை

சொல் பொருள் ஊட்டு, அலங்கரி, மனித உறுப்பு, யானையின் துதிக்கை, கைப்பிடி, உலக நடப்பு, ஒழுங்கு, வரிசை ஈறு, குறுமைப் பொருள்தரல் கை – ஐந்து சொல் பொருள் விளக்கம் கன்னி -> கன்னிகை… Read More »கை

கொள்ளி

சொல் பொருள் நெருப்பு நெருப்புப் பற்றவைக்கப்பட்ட கோல், கொள்ளிக்கட்டை எரிமூட்டல் சொல் பொருள் விளக்கம் இறந்தோர்க்குக் கொள்ளிக் கடன் செய்தல் ஆண் பிள்ளை கடமையாகக் கொண்டமையால் கொள்ளி என்பது ஆண்பிள்ளையைக் குறிப்பதாகத் தென்தமிழ் நாட்டு… Read More »கொள்ளி