Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

ஓடை

ஓடை

ஓடை என்பது நீரோடை, யானையின் நெற்றிப்பட்டம் 1. சொல் பொருள் (பெ) 1. பள்ளம், 2. யானையின் நெற்றிப்பட்டம்(பள்ளம்), 3. நீரோடை, சிறிய நீர்வழி, 4. ஒடுங்கிய பாதை, ஒற்றையடிப்பாதை நடைபாதை 2. சொல்… Read More »ஓடை

தோடு

சொல் பொருள் (பெ) 1. தென்னை, பனை ஆகியவற்றின் இலை,  2. நெல், கரும்பு ஆகியவற்றின் தாள், 3. பூவிதழ்கள்,  4. தொகுதி, கூட்டம், திரள்,  5. பூ 6. காதணி, விளவங்கோடு வட்டாரத்தில்… Read More »தோடு

தோட்டி

சொல் பொருள் (பெ) 1. கதவு, 2. காப்பு, காவல், 3. அங்குசம்,  4. ஆணை,  5. வனப்பு, அழகு, தோட்டி என்பது வளை கத்தி யானைப் பாகன் சொல் பொருள் விளக்கம் தோட்டி… Read More »தோட்டி

கன்னல்

சொல் பொருள் (பெ) 1. நாழிகை வட்டில், 2. நீர் வைக்கும் குறுகிய வாய் உள்ள பாத்திரம் சிறுவிழா என்னும் பொருளில் செட்டிநாட்டு வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் காலம் காட்டும் கருவிப்… Read More »கன்னல்

கறி

கறி

கறி என்பது மிளகு 1. சொல் பொருள் (வி) கொறி, கடித்துத்தின்னு, மெல்ல கடித்தல் (பெ) 1. மிளகு, 2. மாமிசம், இறைச்சி, புலால், அசைவம், 3. காரத்துடன் செய்யப்பட்ட ஒரு உணவு ஆகும் உடல்… Read More »கறி

கவர்

1. சொல் பொருள் (வி) 1. நுகர், அனுபவி, 2. கிளைபடு, பிரிந்துசெல்,  3. தெறி, மீட்டு, 4. பற்றிக்கொள், அகப்படுத்து, 5. அழை, 6. பெற்றுக்கொள், 7. வசப்படுத்து, ஈர், 8. விரும்பு,  9.… Read More »கவர்

கருக்கு

சொல் பொருள் (பெ) பனை மட்டையின் பல்போன்ற கூரிய முனை, குளம்பி(காபி)க் கொட்டை வடிநீர் கரியதாய் இருப்பதால் அதனைக் கருக்கு என்பது நாஞ்சில் வட்டார வழக்கு இளநீரைக் கருக்கு என்பதும் அவ்வட்டார வழக்கில் இருப்பதாகக்… Read More »கருக்கு

கயந்தலை

சொல் பொருள் (பெ) யானைக்கன்று,  நெல்லை குமரி முகவை மாவட்டங்களில் குழந்தையரைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. யானையின் இளங்கன்றைக் கயந்தலை என்பது தொன்மைச் செய்யுள் வழக்கு சொல் பொருள் விளக்கம் யானையின் இளங்கன்றைக் கயந்தலை… Read More »கயந்தலை

கந்து

சொல் பொருள் (பெ) 1. யானை கட்டும் தறி, 2. தெய்வம் உறையும் தறி,  3. பற்றுக்கோடு, ஆதரவு, துண்டம் என்னும் பொருள் தரும் வட்டார வழக்கு நெல்லை, முகவை வழக்காம் சொல் பொருள்… Read More »கந்து

கண்ணி

1. சொல் பொருள் (பெ) 1. தலைமாலை – பெரும்பாலும் ஆடவர் அணிவது,  2. பூமாலை,  கண்களைப்போல் இலை அமைந்தவை கண்ணி எனப்படும் வெற்றிலைக் கொடிக்காலில் இரட்டை இரட்டையாக அமைந்த கொடி வரிசை கண்ணி… Read More »கண்ணி